அதிகாலையிலேயே பிரபல தயாரிப்பாளர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள்; 8 இடங்களில் ஐ.டி.ரெய்டு - பகீர் பின்னணி!
டோலிவுட்டின் நட்சத்திர தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டோலிவுட்டின் நட்சத்திர தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த ஒஸ்தானு ஆகிய இரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியிட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் தெலுங்கானா மாநில திரைப்படம் மேம்பாட்டு கழக தலைவர் தில்ராஜுவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எங்கெல்லாம் சோதனை?
தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு, அவரது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அலுவலகம், அவரது சகோதரர் சிரிஷ் வீடு, அவரது மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிலி ஹில்ஸ், கொண்டாபூர் மற்றும் கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டன்னிங் உடையில்... இடையழகை காட்டி மயக்கும் மடோனா செபஸ்டியன்!
55 அதிகாரிகள் 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகளின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பிற விவரங்களை ஐடி அதிகாரிகள் உன்னிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் தேடல்கள் பல மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் சோதனைகள் முடிந்த பிறகு, கண்டுபிடிக்கப்பட்டதை ஐடி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஐ.டி. சோதனைக்கான காரணம் என்ன?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தில் ராஜுவின் பேனரில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் மற்றும் வெங்கடேஷ் நடித்த சங்கராந்திகியா யாரமன் படங்கள் வெளியிடப்பட்டன. அந்த இரண்டு படங்களின் பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த ஐடி சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கர்இயக்கிய கேம் சேஞ்சர் படத்தால் தில் ராஜுவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுபுறம், சங்கராந்தி திரைப்படம் பொங்கல் ரேஸில் வெற்றி பெற்று இதுவரை 115 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தில் ராஜுவின் வரவு செலவு கணக்குகளை சரி பார்ப்பதற்காக ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் படங்கள் வெளியாகும் போது திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஐடி சோதனைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் தில் ராஜ் தயாரித்த படங்கள் வெளியாகி பத்து நாட்களுக்குப் பிறகு ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தெலுங்கானா நிதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான தில் ராஜுவின் வீட்டில் நடத்தப்பட்டு வரும் ஐ.டி. ரெய்டின் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இளையராஜா 2025 ப்ளான்.. அடேங்கப்பா, அசத்தலா இருக்கே...