கடற்கரையை கவர்ச்சியால் கொந்தளிக்க வைத்த மடோனா செபாஸ்டியன் - வைரல் போட்டோஸ்!
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பீச் கடற்கரையில் உலா வரும் மடோனா செபாஸ்டியன் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரேமம் படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
எப்படி சாய் பல்லவியை மலர் டீச்சராக அறிமுகம் காட்டியதோ அதே போன்று தான் மடோனா செபாஸ்டியனுக்கு இந்தப் படம் நல்லவொரு அடையாளத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: மாடர்ன் பட்டாபூச்சியாய் மாறிய ரகுல் ப்ரீத் சிங்! சுண்டி இழுக்கும் ஹாட் போட்டோஸ்!
அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வந்த காதலும் கடந்து போகும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படமும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவே மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் படத்தில் நடித்தார்.
மேலும், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், ஆர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோர் பலர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்யின் டுவின் சிஸ்டராக நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளியான ஜாலியோ ஜிம்கானா படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து காமெடி ரோலில் கலக்கியிருந்தார்.
தற்போது அதிர்ஷ்டசாலி மற்றும் ஹார்டின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் இப்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குறுகிய கால சுற்றுலாவாக வெளியூர், வெளிநாடு என்று சுற்றி வருகிறார்.
அப்படி அவர் சுற்றுலா சென்ற போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தன்னை விட 4 வயது இளையவரான அமீரை காதலித்து கரம்பிடித்த பாவனி ரெட்டி!