×
 

குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன்... அட்வைஸ் தந்த ஜி.வி.பிரகாஷ்....

மணிகண்டன் நடிப்பில் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ள படம் குடும்பஸ்தன்.

மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட்நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்கள் ஆகும். அந்தவரிசையில் மணிகண்டன் நடிப்பில் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ள படம் குடும்பஸ்தன்.

வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்தை, நக்கலைட்ஸ் யூ டியூப் சேனல் மூலம் அறியப்பட்ட ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். தெலுங்கு நடிகை சான்வி மேக்னா கதாநாயகியாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: வாடிவாசல் திரைப்படம் குறித்த அட்டகாச அப்டேட்....

காக்கா கதை கேட்டிருக்கேன் பாடல் மூலம் பிரபலமான வைசாக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல்பாடலான ஜீரோ பேலன்ஸ் வெளியான நிலையில் தற்போது 2-வது சிங்கிள் ரிலீசாகி உள்ளது. கண்ணைக் கட்டிக்கிட்டு என்று தொடங்கும் அந்த பாடலை பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். ஒரு குடும்பஸ்தன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்வது போல எழுதப்பட்டு இருக்கும் பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் என்கிறது படக்குழு. 

பொங்கலுக்கு ரிலீசான படங்களில் சுந்தர் சி.யின் மதகஜராஜா நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. ஓரளவு வணங்கானும் தப்பி விட்டது. மற்ற படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. எனவே இந்த மாதம் முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளநிலையில் வெகுஜன மக்களை ஈர்க்கும்வகையில் திரைப்படங்கள் வெளியாகும்பட்சத்தில் அவை வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். 

தமிழ் சினிமாவில் வி.சேகர் தனித்துவமான ஒரு இயக்குநர். நடுத்தர குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கொஞ்சம் நகைச்சுவை கலந்து தருவார். அப்படியான படங்கள் கடந்த 25 ஆண்டுகளில் வராத நிலையில், குடும்பஸ்தன் அந்த ஏக்கத்தை தீர்க்கும் என நம்புகின்றனர் படக்குழுவினர். 

இதையும் படிங்க: திருமணங்கள் என்ற அமைப்பே கூடாது என்கிறாரா?... கிருத்திகா உதயநிதி சொல்ல வருவது என்ன?...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share