காமக்கொடூரன்… குடிகார இயக்குனரின் பொறியில் சிக்கிய வைரல் அழகி… பேராபத்தில் மோனாலிசா..!
அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் சனோஜ் மிஸ்ராவை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் தனது மகளை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மகா கும்பமேளாவில் வைரலான கண்ணழகி மோனாலிசாவை கதாநாயகியாக்க அழைத்துச் சென்ற இயக்குனரின் இருண்ட ரகசியங்களை படத் தயாரிப்பாளர் அம்பலப்படுத்தியுள்ளார். ''மகா கும்பமேளாவின் வைரல் பெண் மோனலிசா ஒரு வலையில் சிக்கி இருக்கிறார்.மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
அவர்கள் எளிய மனிதர்கள். கும்பமேளாவில் இருந்து அவரது வைரலான படங்களை நாங்களும் பார்த்தோம். ஆனால் சனோஜ் மிஸ்ரா போன்ற ஒரு இயக்குனர் அவரது வீட்டிற்கு வந்தார். அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் சனோஜ் மிஸ்ராவை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் தனது மகளை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்'' என மோனலிசாவை அழைத்துச் சென்ற இயக்குனர் சனோஜ் மிஸ்ரா குறித்த ஒரு நேர்காணலில் திரைப்பட தயாரிப்பாளர் ஜிதேந்திர நாராயண் சிங் என்கிற வாசிம் ரிஸ்வி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஜிதேந்திர நாராயண் சிங் என்கிற வாசிம் ரிஸ்வி ஒரு திரைப்பட தயாரிப்பாளர். மோனாலிசாவை அழைத்து வந்த சனோஜ் மிஸ்ராவுடன் இணைந்து பெங்கால் டைரீஸ், ராம் கி ஜன்மபூமி, காஷி டு காஷ்மீர் என 3 படங்களை அவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணலுக்காக வந்தார். அப்போது பேசிய அவர், ''சனோஜ் மிஸ்ராவின் எந்த படமும் இன்னும் வெளியாகவில்லை. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறார். அவர் படப்பிடிப்பிற்குக் கூட குடிபோதையில் வருகிறார். அங்கிருந்த பெண் ஊழியர்களிடமும் அவர் தவறாக நடந்து கொண்டார். சனோஜ் மிஸ்ரா மது அருந்திய பிறகு பெண்களை விரும்புபவர்'' என வாசிம் ரிஸ்வி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: போதை பொருள் கடத்தல் ராணி ஒரே நாளில் எப்படி துறவி ஆனார்..? விஜய் பட நாயகியால் கடுப்பான பாபா ராம்தேவ்..!
'சனோஜ் மிஸ்ராவுக்கு தயாரிப்பாளர் இல்லை. அவங்ககிட்ட பணம் இல்ல, அப்புறம் எப்படி படம் எடுக்குறது? மணிப்பூர் டைரி ஒருபோதும் தயாரிக்கப்படாது.இது அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி அவளுடன் சுற்றித் திரிய முயற்சிக்கிறார். அவரால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. சனோஜ் மிஸ்ராவால் ஏமாற்றப்பட்ட பல தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
மோனலிசாவின் குடும்பத்தினர் இயக்குனர் சனோஜ் மிஸ்ராவைப் பற்றி அறிந்திருந்தால், அவர்கள் தங்கள் மகளை அவருடன் அனுப்பியிருக்க மாட்டார்கள். ஒரு படம் தயாரிக்க பணம் தேவை. இப்போது யாரும் சனோஜ் மிஸ்ரா மீது பணம் முதலீடு செய்யத் தயாராக இல்லை. அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு எங்கே நடைபெறுகிறது? அவருடைய பட்ஜெட் எங்கே? அவர் சந்தையில் கடன் வாங்கி ஓடிவிட்டார். இன்றும் கூட அதில் இரண்டு காசுகள் கூட முதலீடு செய்யத் தயாராக இருக்கும் எவரையும் நீங்கள் பார்க்க முடியாது'' என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
இந்த நேர்காணல் வெளிவந்த பிறகு, மோனலிசாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி கவலைப்படத் தொடங்கியுள்ளனர். மோனாலிசாவை மீண்டும் அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு பயனர் 'மோனலிசாவை பாதுக்காக்க ஆதரிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், 'கடவுள் மோனலிசாவைப் பாதுகாக்கட்டும்' என்று கூறியுள்ளார். ரேகா சவுகான் என்ற பயனர், 'மோனலிசாவின் பெற்றோர் இவ்வளவு சீக்கிரம் நம்பியிருக்கக் கூடாது' என்று வேதனைப்பட்டுள்ளார். உன் இளம் மகளை இப்படி வேறு எந்த அந்நியருடனும் அனுப்பியிருக்கக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம்..! பிறந்த நாள் ட்ரீட்டாக வந்தது "மதராஸி"