×
 

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? அண்ணாமலை கண்டனம்..!

முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் காவல் அதிகாரி ஜாகீர் உசேன் பிஜிலி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றுள்ளார்.

பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ஒரு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு, பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பிரேமலதா விஜயகாந்துக்கு அண்ணாமலை, தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து.. பாஜக - தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டதா..?

முகம், பின் தலை ஆகிய இடங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஜாகிர் உசேனை உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம், கொலையாளிகள் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

முன்னாள் காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டிக்கொலை செய்யபட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாகிர் உசேன் கிலோ சம்பவத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது. 

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாபக்கேடு... 'டூப்' போலீஸ் அண்ணாமலை- வறுத்தெடுத்த சேகர்பாபு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share