×
 

இணையத்தை கலக்கும் காதலிக்க நேரமில்லை ட்ரெய்லர்.. யூ டியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல்.....

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” படத்தின் டிரைலர் வெளியீடு..

கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி - நித்யா மேனன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான காதலிக்க நேரமில்லை ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது.  

2013-ம் ஆண்டு வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி, விஜய் ஆண்டனியை வைத்து காளி என்றொரு படமும், வெப் சீரிசாக பேப்பர் ராக்கெட் என்றொரு தொடரும் இயக்கி இருந்தார். இப்போது முழுவீச்சில் காதல், காமெடி என்று பக்கா கமெர்ஷியல் இயக்குநராக களமிறங்கி இருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. 

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜெயம் ரவிக்கு படங்கள் அமையாத நிலையில், இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். குறிப்பாக நித்யா மேனனின் நடிப்பும், ஜெயம் ரவியுடன் அவர் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளது ட்ரெய்லரில் ரசிக்கும்படி உள்ளது.

இதையும் படிங்க: பச்ச பச்சையா கமெண்ட் அடிச்ச ராஜாக்கள் ..சப்புனு அறைந்த நடிகை ஹனி ரோஸ்..30 பேர் பாய்ந்த வழக்கு ..!

ட்ரெய்லருக்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்கள் யூ டியூப் மற்றும் ஸ்பாட்டிபை ஆப்-களை திணறச் செய்து வருகிறது. குறிப்பாக இழு,இழு,இழுனு இழுக்குதடி பாடல், இட்ஸ் ப்ரேக் அப் டா பாடல்கள் பட்டைய கிளப்புகின்றன. யூடியூபில் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் வெறும் 13 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.

கடந்த ஆண்டு முழுவதும் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை படங்களே அதிகம் வந்தநிலையில் இந்த ஆண்டிலாவது மென்மையான படங்கள், குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் வராதா என்று ரசிகர்கள் ஏங்கி வந்தநிலையில், அதனை காதலிக்க நேரமில்லை ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி, முதன்முறையாக பெண் இயக்குநர் இயக்கத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டார். தன்னுடைய நடிப்பில் கூட புதியதொரு கோணம் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பொங்கல் பண்டிகைக்கு அஜீத்தின் விடாமுயற்சி விலகிய நிலையில், 10 படங்கள் வெளிவருவது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சிறுபடங்களுக்கும் திரையரங்குகள் கிடைத்திருப்பதால் இந்த பொங்கல், திரைப்பொங்கல் என அவர்கள் கூறிவருகின்றனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தாலும், அதுவும் காத்திருந்து தற்போது வெளிவருவது காதலிக்க நேரமில்லை படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

இதையும் படிங்க: மிதந்துகிட்டே அறுசுவையும் சுவைக்கலாம் ..துவங்கியது மிதவை படகு உணவகம் .. சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share