×
 

பார்வதி நாயர் திருமண புகைப்படங்கள்!

நடிகை பார்வதி நாயருக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவரது திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர்.
 

சிறு வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த இவர் பின்னர் மலையாள படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!

ஏராளமான அழகி போட்டிகளில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவரால், திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வெல்ல முடியாமல் போனது.

நடிப்பின் திறமையை நிரூபிக்க பார்வதி நாயர் தொடர்ந்து போராடியும் இவருக்கு ஏற்ற சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர் நேற்று தன்னுடைய காதலர் ஆர்ஷித் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆர்ஷித் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்துக்கள் முறைப்படி இவர்களின் திருமணம் ட்ரடிஷனலாக நடந்துள்ளது.

இவர்களின் திருமணத்தில் ஏராளமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதியின் திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் நடந்தாக கூறப்படுகிறது 

பார்வதி தங்க நிற புடவையில் பேரழகியாய் ஜொலித்தார்.

இவரது கணவர் ஆர்ஷித் பட்டு வேஷ்டி மற்றும் ஜிப்பா அணிந்துள்ளார்.

இவர்களின் திருமணம் ஆந்திரா முறைப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது 

இதையும் படிங்க: நடிப்புக்கு "குட் பை" சொன்ன 'உலக அழகி' இஷிகா தனேஜா; மகா கும்பமேளாவில் 'சனாதன தர்ம'த்தில் இணைந்தார் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share