×
 

எக்ஸ் தளத்தில் எகிறி அடிக்கும் அரசியல் சண்டை..! கெட்அவுட் ஸ்டாலினுக்கு மேலாக ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க..!

எக்ஸ் தளத்தில் தற்போது கெட்அவுட் ஸ்டாலினுக்கு மேலாக தமிழ் வாழ்க தான் ட்ரெண்டாகி வருகிறது.

இன்றைய தேதிக்கு அரசியல் களம் எங்கு விறுவிறுப்பாக இருக்கிறது என்றால் அது ட்விட்டர் என முன்பு அழைக்கப்பட்ட எக்ஸ் தளத்தில் தான். கருத்துகள் மோதிக் கொள்ளும் யுத்தகளமாக, தங்கள் வலிமையை பறைசாற்றும் மேடையாக எக்ஸ் தளம் செயல்படுகிறது. 

சில நாட்களுக்கு முன்பு பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார். முன்புபோல கோ பேக் மோடி என்று இப்போது உங்களால் கூறமுடியுமா? அதற்கு துணிவு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (20/2/2025) திமுகவினர் கெட்அவுட்மோடி என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ்தளத்தில் ட்ரெண்டிங் செய்தனர். இந்திய அளவில் 2-வது இடத்தில் அந்த ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இதற்கு சேலத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினருக்கு பதிலடி கொடுக்க இன்று (21/2/2025) காலை 6 மணிமுதல் கெட்அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கும்படி பாஜகவினரை கேட்டுக் கொண்டார். காலை முதல் பாஜகவினரும், திமுக எதிர்ப்பாளர்களும் அந்த ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ.498.8 கோடி ஒதுக்கீடு!

இதனிடையே இன்று உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் திமுகவினராலும், தமிழ் ஆர்வலர்களாலும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. கெட்அவுட் ஸ்டாலின் என்பதைக் காட்டிலும் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் முன்னணியில் இருந்து வருகிறது.

தொண்டர் பலம், தொழில்நுட்பத்தை முறையாக கையாளுதல், தங்கள் கருத்துகளை உரிய முறையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை எடைபோடும் களமாக எக்ஸ் தளம் மாறிவிட்டது. முன்பெல்லாம் டீக்கடைகளில், முடிவெட்டும் கடைகளில், பேருந்துகளில் அரசியல் பேசுவதை பார்த்திருப்போம். இப்போது ஒரு அரசியல் கட்சியின் செயல்பாட்டை அறிந்து கொள்ளும் விதமாக எக்ஸ் தளத்தின் பதிவுகள் காணப்படுகின்றன. 

அதுவும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் காரணியாகவும், அரேபிய வசந்தம் முதலான பல நாடுகளில் நடைபெற்ற அரசியல் புரட்சிகளுக்கு காரணமாகவும் சமூக வலைதளங்கள் உள்ளன. இவற்றின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. அதுவும் கடந்த பத்தாண்டுகளில் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் வருகைக்குப் பிறகு அரசியல் என்பதே சமூக வலைதளங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து பார்க்கப்படுகிறது. இன்றைய கெட்அவுட் ஸ்டாலின், தமிழ்வாழ்க ஹேஷ்டேக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
 

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஏ.கே.செங்கோட்டையன்... முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share