×
 

புஷ்பா 2 தியேட்டர் சம்பவம் ...தாயை இழந்து மருத்துவனையில் சிறுவன்.. நலம் விசாரித்த அல்லு அர்ஜுன்..!

திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் அல்லு அர்ஜுன்..!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற சந்தியா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான். அந்த சிறுவன் செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விவகாரத்தில் தியேட்டருக்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தி பெண் பலியாக காரணமான அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து ஆந்திராவில் உள்ள ராம் கோபால்பேட்டை போலீசார், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்க செல்லக்கூடாது. எங்களது தடையை மீறி சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை  நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்   நடிகர் அல்லு அர்ஜுன்.

ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்தார். சிறுவனின் உடல்நலம் குறித்தும் மருத்துவர்களுடன் கேட்டறிந்தார்.அவருடன் தயாரிப்பாளர் தில் ராஜுவும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். சிகிச்சையில் உள்ள சிறுவனை சில நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் தந்தை நேரில் சென்று சந்தித்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுனும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்

இதையும் படிங்க: பச்ச பச்சையா கமெண்ட் அடிச்ச ராஜாக்கள் ..சப்புனு அறைந்த நடிகை ஹனி ரோஸ்..30 பேர் பாய்ந்த வழக்கு ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share