×
 

பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த "புஷ்பா" ஜாலி ரெட்டிக்கு கல்யாணம்..! சிக்குன பொண்ணு யார் தெரியுமா..!

புஷ்பா பட நடிகருக்கு காதல் திருமணம் நடந்திருக்கிறது என்ற செய்தி தற்பொழுது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

என்ன தான் இவர் பெயர் 'டாலி தனஞ்சயா' என்று இருந்தாலும் மக்களால் அன்போடு அழைக்கப்படுவது ஜாலி ரெட்டி. இந்த பேரை கேட்டவுடன் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இவர் புஷ்பா படத்தில் இருக்கும் கொண்டாரெட்டியின் இரண்டாவது தம்பி என்று. படத்தில் பல பெண்களின் வாழ்க்கையை பாழாக்கிய ஜாலி ரெட்டியை புஷ்பா அடித்து துவைத்து பாழாக்கி இருப்பார். அதனால் புஷ்பா மூன்றாவது பாகத்தில் கண்டிப்பாக புஷ்பாவை பழிவாங்க ஜாலி ரெட்டி வருவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். 

படத்தில் கோவக்காரராக இருந்தாலும் நிஜத்தில் இவர் ஓர் காதல் மன்னன். ஏனெனில் நடிகர் டாலி தனஞ்சயா, என் காதலி முதலில் ரசிகராக என்னை சந்திக்க வந்தவர், முதல் சந்திப்பில் இருவருக்கும் ஒத்துப்போக நண்பர்களானோம். அது அப்படியே காதலாக மாறியது என்றார். இந்த சூழலில் மருத்துவரான தனது காதலி 'தன்யதா கௌரக்லரா'வை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க: கவுண்டமணியை வம்பிழுக்க வடிவேலு என்ன செய்வார் தெரியுமா..! நடந்ததை உடைத்த இயக்குநர்..!

இவர்களது திருமணம் பிரம்மாண்டமான மைசூர் மாளிகையில் நடந்திருக்கிறது. இது பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளிப்பது போல் இருந்தது என, திருமணத்தில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்களும், பிரபலங்களும் கூறியிருக்கின்றனர். இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: ஆபாசமா... சமூக சேவையா..! காசு வாங்காமலா நடிச்சிருப்பீங்க.. ரச்சிதாவை வறுத்தெடுத்த ரிப்போர்ட்டர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share