×
 

ரஜினிக்கே டூப்… வீட்டிலேயே மயங்கி கிடந்த மனோஜ்... நெஞ்சைப் பிடித்து சரிந்த சோகம்..!

இன்னும் 2 மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தன் மகன் மனோஜ்பாரதியின் மரணச் செய்தி கேட்டு சரிந்து போனார். 

48 வயதாகும் மனோஜ் பாரதிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இதய பிரச்னையை சரி செய்துவிடலாம் என்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் கடந்த 6 நாட்களுக்கு முன்பாகத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் மனோஜ் பாரதி. 

இந்நிலையில், சிறுநீரகம் செயலிழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும், இன்று மாலை வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார் மனோஜ். நெஞ்சைப் பிடித்து சரிந்தபடியே அவரது உயிர் பிரிந்துள்ளது. சென்னை சேத்பட்டில் இருக்கும் வீட்டில் இருந்தபோது இன்று மாலை 6 மணியளவில் இப்படித்தான் மரணித்துள்ளார் மனோஜ் பாரதி. மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மனோஜ் பாரதிக்கு  இரு செல்ல மகள்கள்.

இதையும் படிங்க: ரஜினிக்கே அல்வா..! உங்களுக்கு பிரைம்னா.. எங்களுக்கு..? விற்பனையானது ஜனநாயகன் படம்..!

தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் தந்தை பாரதிராஜா நடிகராக அறிமுகமானார் மனோஜ் பாரதி தந்தையைப் போலவே மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

செப்டம்பர் 11, 1976 பிறந்தவர் மனோஜ் பாரதி. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் என்பதால் பிரபலமானவர் . மனோஜ் 1999-ல் தாஜ்மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் சமுத்திரம், காதல் பூக்கள்,  அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம், அன்னக்கொடி மற்றும் பேபி  ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் நடிகராக மாறுவதற்கு முன்பு, மனோஜ் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர் போன்ற படங்களில் தனது தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். தமிழ் திரைப்படத் துறையில் நடிகராக மாறுவதற்கு முன்பு , மனோஜ் உதவி நடிகராகப் பணியாற்றினார். அவர் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளைப் பயின்றவர். 

பம்பாயில் ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் போன்ற படங்களிலும், தனது தந்தை பாரதி ராஜாவிடமும் உதவியாளராகப் பணியாற்றினார் . 2008 முதல் 2010 வரை, இயக்குனர் எஸ். ஷங்கரின் பிரமாண்டமான படைப்பான எந்திரனில் உதவியாளராகப் பணியாற்றினார் . அந்தப்படத்தில் ரஜினிக்கு டூப் கூடப் போட்டுள்ளார்.

2007 முதல், மனோஜ் தனது தந்தையின் சிகப்பு ரோஜா படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.  

2012 ஆம் ஆண்டில், அவரது தந்தை தயாரிப்பான அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் அமீருக்குப் பதிலாக ஒரு வில்லனாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் ஏழு வருட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நவம்பர் 19, 2006 அன்று, மனோஜ் தனது நீண்டகால தோழி நடிகை நந்தனாவை மணந்தார். அவர் ஏபிசிடி மற்றும் சக்சஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் .நந்தனா 'சாதுரியன்' என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்தார் . இந்த திருமணம் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஆஷிர்வாட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இது நந்தனாவின் சொந்த ஊர், அதே நேரத்தில் டிசம்பர் 1, 2006 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் ஒரு பிரமாண்டமான வரவேற்பு நடைபெற்றது . இந்த தம்பதியருக்கு ஆர்த்திகா, மதிவதானி என இரண்டு மகள்கள்.

பாரதி ராஜாவின் பால்யகால, திரையுலக நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ''என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வதென்றே எனக்கு வார்த்தைகள் வரவில்லை" என்று விம்மி வெடித்துள்ளார்.

இன்னும் 2 மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இந்த  சோகத்தில் மீனா முதல் சோனா வரை அழுது கலங்குகிறார்கள். 

இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share