ராக்கி சவந்தின் 'அந்த' வீடியோக்களால் அதிர்ச்சி... திருமணத்தை முறித்த பாகிஸ்தான் மாப்பிள்ளை..!
தேனிலவு கனவில் இருந்த ராக்கிக்கு கிளைமேக்ஸில் பாகிஸ்தான் மாப்பிள்ளை 'ராக்கி' கட்டிவிட்டார்..!
தொலைக்காட்சியின் 'டிராமா குயின்', 'சர்ச்சைகளின் ராணி' 'பிக் பாஸ்' முன்னாள் போட்டியாளரான ராக்கி சாவந்த் பாகிஸ்தானின் மருமகளாக செல்ல இருப்பதாக வந்த தகவலில் இருந்து பரப்பாக பேசப்பட்டு வருகிறார்.அவரை திருமணம் செய்ய தயாராக இருந்தவர் பாகிஸ்தானின் டோடி கான்.அவர் அங்கு ஒரு நடிகராகவும்,தொழிலதிபருமாக இருக்கிறார். அவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் என்றும், திருமணத்திற்குப் பிறகு இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும், தேனிலவுக்காக நெதர்லாந்து அல்லது சுவிட்சர்லாந்து செல்வதாகவும் ராக்கி கனவுலகில் மிதந்தார். ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு முன்பே ராக்கியின் இதயம் சுக்குநூறாய் உடைந்து விட்டது. ராக்கியை திருமணம் செய்ய டோடி கான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் காதலன் டோடி கான் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ராக்கி சாவந்த் வருத்தத்துடன் சோக கானம் பாடி வருகிறார். நேற்று இரவு, டோடி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவேற்றி, ''ராக்கியை திருமணம் செய்யப் போவதில்லை'' என்று தெளிவுபடுத்தினார். இதற்கு பதிலளித்த ராக்கி, ''கண்ணீர் நிறைந்த கண்கள், உடைந்த இதயங்களின்'' பல எமோஜிகளை டோடி கானின் பதிவ்ற்கு கீழ் கமெண்டில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் 3- வது திருமணம்: பாகிஸ்தான் நடிகரை கரம் பிடிக்கிறார்! சுவிட்சர்லாந்தில் தேன்நிலவு!
ராக்கியின் பல ரசிகர்கள் டோடி கானின் வீடியோவுக்கு '' இந்திய நடிகையின் உணர்வுகளை ஏன் புண்படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பிருகின்றனர். 'முதலிலேயே யோசிக்காமல் நீங்கள் ஏன் திருமணம் செய்ய சம்மதித்தீர்கள்..? இது மிகவும் வருத்தமாக இருக்கிறது'' என பதிவிட்டு வருகின்றனர். ராக்கி திருமணத்தை அறிவித்தபோது இதே ரசிகர்கள்தான், ''யார் மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். நீங்களும், ராக்கியும் திருமணம் செய்துகொண்டு மீடியாவை பற்றி கவலைப்படாமல் சந்தோஷமாக வாழுங்கள்'' என்று பலரும் அலட்சியமாக பதிலளித்து வந்தனர். இப்போது அதே ரசிகர்கள் ராக்கிக்காக அனுதாபப்படுகின்றனர்.
ராக்கியை திருமணம் செய்ய வாக்குறுதி அளித்திருந்தாலும், தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று டோடி கான் வீடியோவில் தெரிவித்துள்ளார். முன்பு,ராக்கியைப் பாராட்டித் தள்ளிய அவர்,''ராக்கி கடந்த காலத்தில் தான் எதிர்கொண்ட அனைத்தையும் ராக்கி குறிப்பிடுகிறார். அவரது துணிச்சல் காரணமாக அவரை மிகவும் விரும்புகிறேன்'' என இதே டோனி கான் தான் காதல் வயப்பட்டதற்கு காரணம் கூறி இருந்தார்.
டோடி கான், ''வணக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான், நான் டோடி கான். சில நாட்களுக்கு முன்பு, ராக்கி சாவந்துக்கு நான் முன்மொழிந்த எனது வீடியோவை சமூக ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். எனக்கு அவளை நன்றாக தெரியும் என்பதால் நான் அவளிடம் முன்மொழிந்தேன். நான் அவளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தபோது, அவள் கடவுளை மிகவும் நேசிப்பவள் என்று உணர்ந்தேன். அவள் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறாள். அவள் பெற்றோரை இழந்தாள். ஆனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களுடன் இருந்தாள். அவள் வாழ்க்கையில் ஒரு பையன் வந்தான். அவன் அவளை என்ன செய்தான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அவள் பல துன்பங்களில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர், உம்ராவுக்குச் சென்று தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டார். எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் அவளளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்'' என காதல் ரசம் சொட்டச் சொட்ட உருகி இருந்தார் டோடி கான்.
அதே டோடி கான் இப்போது, ''ராக்கியுடனான திருமணத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு நிறைய செய்திகள், வீடியோக்கள் வந்துள்ளன. அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, ராக்கி ஜி, நீங்கள் எனக்கு மிகவும் நல்ல நண்பர். எப்போதும் அப்படி இருப்பீர்கள். நீங்கள் என் மணமகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் பாகிஸ்தானின் மருமகளாக இருப்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். என் சகோதரன் ஒருவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்'' எனக் கூறி மாப்பிள்ளையாக இருக்க வேண்டிய டோடி, வேறு மாப்பிள்ளை பார்ப்பதாக ராக்கியின் இதயத்தை இடம் மாற்றி வைக்க முன் வந்துள்ளார்.
ராக்கி சாவந்த் முன்பு அடில் கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால்ம், இருவரும் 2023ல் பிரிந்தனர். அடிலுக்கு முன், ராக்கி, ரித்தேஷ் ராஜ் சிங்கையும் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 'பிக் பாஸ் 15' இல் பங்கேற்றனர். ஆனால் பிப்ரவரி 2022ல் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடனேயே தங்கள் திருமண வாழ்க்கையையும் முடித்துக் கொண்டனர்.
தேனிலவு கனவில் இருந்த ராக்கிக்கு கிளைமேக்ஸில் பாகிஸ்தான் மாப்பிள்ளை 'ராக்கி' கட்டிவிட்டார்..!
இதையும் படிங்க: ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...