×
 

புல்வெளிக்குள் பூத்த புன்னகை பூவே... ரம்யா பாண்டியனின் ஏஞ்சல் லுக் போட்டோஸ்!

நடிகை ரம்யா பாண்டியனின், லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆகவேண்டும் என்கிற கனவோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன்.
 

டம்மி டப்பாசு புசுவானம் போல் பெயிலியர் ஆனாலும், ஜோக்கர் படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

இதை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை அட்ட பிளாப் ஆனதால், பட வாய்ப்புகள் குறைந்தன.

பட வாய்ப்பு இல்லாமல் போன ஒரு கட்டத்தில் சின்னத்திரை மீது கவனம் செலுத்த துவங்கினார் ரம்யா பாண்டியன்.

இதையும் படிங்க: ஜெயிலர் ரிட்டன்ஸ்... இனி பேச்சே இல்ல ஒன்லி ஆக்ஷன் தான்..ஜெயிலர் 2 ஷுட்டிங் ஸ்டார்ட்..!

அந்த வகையில் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

அதே போல் கதை தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்திய ரம்யா பாண்டியனுக்கு ஏனோ தற்போது வரை நிலையான இடம் கிடைக்கவில்லை.

வயசும் 34-கை எட்டிவிட்டதால் சைலண்டாக வடமாநில இளைஞர் லவ்வல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பின்னர் அடுத்தடுத்து தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் இப்போது புல்வெளிக்குள் அமர்ந்து வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

வெள்ளை நிற கவுன் அணிந்து, ஃப்ரீ ஹேரில் லைட் மேக்கப்போடு இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

திருமணத்திற்கு பின்னர் ரம்யா பாண்டியனின் அழகு கூடி உள்ளதாக சில ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: ‘என் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளிகூட இல்லை, ஆனால்…’ நடிகைக்காக கலங்கிய டிஜிபி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share