×
 

உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!

தான் கூர்க்கைச் சேர்ந்தவள்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கொண்டு தான் அலைந்திருப்பாள். அவளுக்கு இப்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஹைதராபாத் என்று சொல்லிக் கொள்வதுதான் சிறந்தது

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படம் தான் இந்த பார்ட்டிக்கு அடையாளம் கொடுத்தது. 

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்மிகா. கூர்க் பொது பள்ளியில் ஆத்தி சூடி படித்து, பெங்களூரிலுள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கன்னட நடிகர் ரிசப் ஷெட்டியுன் நிச்சயதார்த்தம் வரை சென்று பிரிந்து வந்தவர்தான் இந்த மந்தனா. இப்படி கன்னடத்துடன் உண்டான வேரைத்தான் அறுக்க முயன்று மூக்குடைக்கப்பட்டு வருகிறார் ராஷ்மிகா. 

கடந்த சில ஆண்டுகளாக கன்னட ரசிகர்கள் பலர் ராஷ்மிகா  தனது வேர்களை அறுத்து வருவதாக குற்றம் சாட்டி குமுறுகின்றனர். சமீபத்தில், ராஷ்மிகா தன்னை ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் ஒரு வீடியோ கிளிப் வெளியாகி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது.

இதையும் படிங்க: வறுமையில் வாடும் நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா... ஆதரவின்றி அரசு மருத்துவமனையில் அனுமதி....

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, அவரது புதிய படமான 'சாவா'வின் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், பேசிய ராஷ்மிகா, ' நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவளாக்கும். நான் தனியாக வந்திருக்கிறேன். இன்று நான் உங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறுவேன் என்று நம்புகிறேன்'' என மனமுருகிப்ப்பேசினார். இதைப்பார்த்து மெய் சிலிர்த்துப்போன தெலுங்கு ரசிகர்கள் புல்லரித்து போய் பாராட்டினார்கள். ராஷ்மிகா அவர்களுக்கு புன்னகையுடன் நன்றி தெரிவித்தார் ராஷ்மிகா.

இதைப் பார்த்த கன்னட ரசிகர்கள் கொதிப்படைதனர்.'நமது கன்னடர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெறும்போது சில சமயங்களில் நான் உங்களுக்காக பரிதாபப்படுகிறேன்' என்ற தலைப்புடன் அவருக்கு எதிராக வீடியோ கிளிப் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

இப்படி ராஷ்மிகா கூறுவதால் அவர் தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு திரையுலகையும் ஏமாற்ற முயற்சிக்கிறார். என்னா நடிப்புடா சாமி'' எனக் கடிந்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனாவை ஆதரிக்கும் சிலரோ "சினிமா ஒரு பெரிய சந்தை. எனவே இங்கு விசுவாசத்தை விட தொழில் விருப்பமே முக்கியம்" என்று அம்மணிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அவரது ரசிகர் ஒருவர் 2024 ஆம் ஆண்டு ராஷ்மிகாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டார். அதில் மந்தனா கூர்க் இனத்தின் மீதான தனது காதலைப் பற்றிப் பேசி இருந்தார். '' நான் எப்போதும் கூர்க்கைச் சேர்ந்தவர். கொடவா புடவைகளை அணிவேன்'' என்கிற வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கும் மந்தனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவரது ரசிகர்கள், ''நீங்க எந்த வீடியோவ எடுத்தாலும் ராஷ்மிகாவை குறை சொல்றீங்க.

அவர் இப்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார் என்று அர்த்தம். அவர் கால் உடைந்து ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு போய் விட்டார். இல்லை என்றால், தான் கூர்க்கைச் சேர்ந்தவள்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கொண்டு தான் அலைந்திருப்பாள். அவளுக்கு இப்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஹைதராபாத் என்று சொல்லிக் கொள்வதுதான் சிறந்தது'' என மந்தனா மீது மதம், கொண்டவராக ஆதரவு தெரிவித்துள்ளார் அந்த ரசிகர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ராஷ்மிகா மந்தனாவின் 'சாவா' படம் திரையரங்குகளில் அலைகளை உருவாக்கி வருகிறது. விக்கி கௌஷல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளது. காயம் காரணமாக நீண்ட காலமாக நடிக்க முடியாமல் இருந்த'சிக்கந்தர்' படப்பிடிப்பிலும் ராஷ்மிகா மீண்டும் பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: அடித்து தூக்கிய அம்பானி ..! டிஸ்னி ஹாட்ஸ்டார் இனி JIO HOTSTAR...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share