×
 

46 வயதிலும் கண்ணை பறிக்கும் அழகு; ஸ்லீவ் லெஸ் உடையில் ஜோதிகா பகிர்ந்த போட்டோஸ்!

நடிகை ஜோதிகா பகிர்ந்த, ஸ்லீவ் லெஸ் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த அழகு தேவதை தான் நடிகை ஜோதிகா.

இவரின் அக்கா நக்மா, ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்தவர்.

அக்காவை தொடர்ந்து, ஜோதிகாவுக்கு சினிமா மேல் ஆசை ஏற்பட்டது.

படித்து முடித்த கையேடு ஹிந்தி படத்தில் நடித்தார்.

அப்படியே அஜித் நடிப்பில் உருவான வாலி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றி ஜோதிகாவை அதிகம் கவனிக்க வைத்தது.

இதன் பின்னர் தமிழிலும் சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார்.

இந்த படம் தோல்வியை தழுவிய போதிலும், ஜோதிகாவுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், விக்ரம், சிம்பு, மாதவன், என தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

காக்கா காக்க படத்தில் நடிக்கும் போது சூர்யாவிடம் காதல்வயப்பட்ட ஜோ, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு மருமகளாக மாறினார்.

இதையும் படிங்க: சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கல்யாணத்தில் காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !

சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தற்போது தியா - தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் ஜோ, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழை விட ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் 46 வயதிலும் அழகு குறையாமல் ஸ்லீவ் லெஸ் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ்; ஆசைங்கப்பட போகும் ரத்னம்! இன்றைய அண்ணா சீரியல் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share