சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் அடையாளம் காணப்பட்டார்… சிசிடிவி வீடியோவில் சிக்கிய பரபர காட்சிகள்..!
போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். அந்த ஆசாமியின் வீட்டின் இருப்பிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரது வீட்டிற்கும் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
சைஃப் அலிகானைத் தாக்கிய நபரின் முதல் படம் வெளிவந்தது.சிசிடிவியில் அவர் படிக்கட்டுகளில் இருந்து கீழே ஓடுவதைக் காட்டியது.
இன்று அதிகாலை 3 மணிக்கு சைஃப் அலி கான் அவரது வீட்டில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒரு நபர், அவரை கத்தியால் ஆறு முறை குத்தினார். இப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் படிக்கட்டுகளில் இறங்கும்போது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது, 10 போலீஸ் குழுக்கள் இந்த விவகாரத்தை விசாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் ஓடுவது அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது.
தாக்குதல் நடத்தியவர் முதுகில் ஒரு பையை சுமந்து செல்கிறார். சிசிடிவி காட்சிகள் அதிகாலை 2:33 மணியிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த காட்சிகளின் அடிப்படையில், மும்பை காவல்துறை அவரைத் தேடி வருகிறது. போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். அந்த ஆசாமியின் வீட்டின் இருப்பிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரது வீட்டிற்கும் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரைத் தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 10 போலீஸ் தனிப்படைகளும் தவிர, 8 குற்றப்பிரிவு தனிப்படைகளும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
இதையும் படிங்க: ரத்தம் சொட்ட, சொட்ட நின்ற சைஃப் அலிகான்...! அப்பாவைக் காப்பாற்ற மகன் செய்த உடனடி செயல்!
சைஃப் அலி கானின் முதுகுத்தண்டில் கத்தியின் ஒரு பகுதி சிக்கியுள்ளதாகவும், அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும் லீலாவதி மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். “கத்தி அவரது முதுகுத் தண்டுவடத்தை ஊடுருவியதால் அவரது மார்பு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கத்தியை அகற்றவும், முதுகெலும்பிலிருந்து திரவம் கசிவதை நிறுத்தவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையிலும் கழுத்தின் வலது பக்கத்திலும் இரண்டு ஆழமான காயங்கள் இருந்தன. அவை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குழுவால் சரிசெய்யப்பட்டன.
சைஃப் அலி கானின் உடல்நிலை சீராக உள்ளது என்றார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, அவர் முற்றிலும் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டார். நாளை காலை அவரை ஐசியுவிலிருந்து வெளியே அழைத்துச் சென்று, ஓரிரு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சைஃப் அலிகான் உடல் நிலை எப்படியுள்ளது? - மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!