மரணத்தின் வாசல் வரை சென்ற சைஃப் அலிகான்; இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
6 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் இன்று பத்திரமாக வீடு திரும்பினார்.
6 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் இன்று பத்திரமாக வீடு திரும்பினார்.
ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில், மும்பை பாந்த்ராவில் உள்ள 'சத்குரு ஷரன்' கட்டிடத்தில் உள்ள சைஃப்பின் வீட்டிற்குள் திருடன் புகுந்துள்ளான். அங்கு கொள்ளையடிக்க முயன்ற நபரை சைஃப் அலிகான் தடுத்து நிறுத்த முயன்றதை அடுத்து, திருடன் தப்பிப்பதற்காக சைஃப் அலிகானை ஒன்றல்ல... இரண்டல்ல 7 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் அவரது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உடனடியாக அறுவை செய்யப்பட்டது. சைஃப் அலி கானின் உடலில் 6 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது.அவற்றில் 2 காயங்கள் மிகவும் ஆழமானவை என மருத்துவர்கள் குழு தெரிவித்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியான மருத்துவ அறிக்கையில், “நான்கு ஆழமான காயங்களும், கூடுதலாக இரண்டு சிறிய காயங்களும் ஏற்பட்டன. இந்த கத்திகளில் ஒன்றின் 2.5 அங்குல துண்டு அவரது முதுகில் இறங்கி இருந்தது. கத்தி அவரது முதுகில் ஆழமாகச் சென்றிருந்தால், அது பக்கவாதத்திற்கு வழிவகுத்திருக்கும். கடவுளின் ஆசீர்வாதத்தால், சைஃப் எந்த பெரிய சிக்கல்களையும் சந்திக்கவில்லை” என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: ஷாருக்-சல்மான்கான் வீடுகளே முதல் டார்கெட்... சைஃப் அலிகான் வீட்டை தேர்ந்தெடுத்தது ஏன்..? குற்றவாளியின் பகீர் ப்ளான்..!
ஆனால் மருத்துவர் சொன்னது போல், கத்தி மிகவும் ஆழமாகச் சென்றிருந்தால், சைஃப் அலி கானுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கும். அதாவது அவரது திரைப்பட வாழ்க்கை முடிவுக்கு வரும் விளிம்பில் இருந்திருக்கும். இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான் பூரண உடல் நலம் பெற்றதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கொடூரமான தாக்குதலில் இருந்து மீண்ட சைஃப் அலிகான் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களையும், பாலிவுட் பிரபலங்களையும் நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.
சைஃப் அலிகானைக் கத்தியால் குத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமின் ஃபகிர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை தானேயில் கைது செய்யப்பட்டார். அவர் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் விஐபி போட்ட ஒற்றை ட்வீட்..! சைஃப் அலி கான் தாக்கப்பட்டதில் சதி..! குற்றவாளியின் பகீர் பின்னணி..!