×
 

”வாட் ப்ரோ, ஒய் ப்ரோ” என விஜய்யை கிண்டலடித்த சரத்குமார்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாட் ப்ரோ, ராங் ப்ரோ என பேசிய நிலையில், அவரது பாணியில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாட் ப்ரோ, ராங் ப்ரோ என பேசிய நிலையில், அவரது பாணியில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், “இப்போது புதிதாக ஒருத்தர் அரசியலுக்கு வந்துவிட்டார். அவரை பற்றி நான் பேசவே கூடாது என்று இருந்தேன். 

விஜய் பிரபலமான நடிகர். நீங்கள் சூப்பர் ஸ்டார் அளவுக்கு இருக்கிறீர்கள். பொதுவாக அரசியலுக்கு வரவோரை வரவேற்பவன் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் உண்மையை பேச வேண்டும். விஜய் அலுவலகத்தில் இருந்த ஸ்டாலின் கெட் அவுட் என போடப்பட்டிருந்ததில் கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டார். 

கையெழுத்து போட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்களோ என அவர் பயந்து விட்டார். இல்லையென்றால் அவர் கையெழுத்து போட்டிருப்பார். விஜய்க்கு அரசியல் சொல்லி கொடுக்கும் வேலையை தான் பிரசாந்த் கிஷோர் செய்து கொண்டிருக்கிறார். 

இதையும் படிங்க: ‘டேய் என்னங்கடா’... தவெக தலைவர் விஜயை ஒருமையில் சாடிய சரத்குமார் - ஏன் தெரியுமா? 

இந்தி தெரிந்தவரிடம் இருந்துட் ஹான் நீங்கள் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டுமா? யாரை ஏமாற்றுகிறீர்கள் ? வாட் ப்ரோ, ஏன் ப்ரோ, ஒய் ப்ரோ? நீங்கள் அழைத்து வந்த பிரசாந்த் கிஷோர் அவரது சொந்த இடத்திலேயே தோற்று போனவர். அவர் இங்கு வந்து ஜெயிக்க வைத்து விடுவாராம்” என்று பேசியுள்ளார். 

தவெகவின் 2ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய விஜய் தமிழக அரசின் மும்மொழி கொள்கை எதிர்ப்பை கண்டித்தும், ஹேஷ்டேக் டிரெண்டிங் வைத்தும் தமிழக அரசையும், பாஜகவையும் விமர்சித்து ராங் ப்ரோ என்ற பாணியில் பேசினார். விஜய் பேசிய வீடியோ வைரலான நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என அரசியல் தலைவர்கள் ப்ரோ என்ற வார்த்தையை பயன்படுத்தி விஜய்க்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய் தனது சர்சை பேச்சால் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் விஜய் பாணியில் ஐ எம் சாரி புரோ என பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.  விஜய்யின் அரசியல் பிரேவேகம் தமிழக அரசியல் களத்தில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமார், அக்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன், விஜய்யை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share