×
 

செல்வராகவன் கொடுத்த புத்தாண்டு பரிசு.. 7ஜி ரெயின்போ காலனி-2

தமிழ் சினிமாவை மடைமாற்றிய இயக்குநர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் 2000-த்திற்கு பிறகான வரிசையில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவர் செல்வராகவன்.

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைக்களங்களை, கதைமாந்தர்களை அறிமுகப்படுத்திய பெருமை செல்வராகவனுக்கு உண்டு. Coming of age என்ற வகைமையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதில் விடலைப் பருவத்தின் தாபங்கள் மட்டுமே பேசப்பட்டு இருக்கும். ஆனால் பதின்ம வயதினரின் தடுமாற்றங்கள், மன இறுக்கங்கள், அவர்களை அல்லல்படுத்தும் சமூக உறவு முறை சிக்கல்கள் ஆகியவை குறித்து அப்பட்டமாக திரையில் பேசிய படம் செல்வராகவன் இயக்கி 2002-ல் வெளிவந்த துள்ளுவதோ இளமை. அதில் தான் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் இளசுகளின் ஆதர்சம் என்றால் அது மிகையல்ல. அட திரையில் நம்மள பாக்குற மாதிரியே இருக்கே என்று ஒவ்வொரு இளைஞர்களும் உணரும் வகையில் காட்சி அமைப்புகள் அந்த படத்தில் இடம்பெற்று இருக்கும். 

அடுத்த ஆண்டே மீண்டும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். பாடல்கள், இசை, நடனம் என அந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் வெற்றியை அந்த படம் பெற்றது. 2004-ல் 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தை கொண்டு வந்தார் செல்வராகவன். காதலர்களின் நெஞ்சை கசக்கிப் பிழிந்து கண்களில் தாரைதாரையாய் கண்ணீரை கொட்ட வைத்தது அந்த படம். பிரிவுத்துயரை இதைவிடவும் உருக்கமாகவும், உக்கிரமாகவும் யாராலும் சொல்லிவிட முடியாது என்ற அளவுக்கு 7ஜி ரெயின்போ காலனியின் படமும், பாடல்களும் காதலர்களாக கொண்டாடப்பட்டது. ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோரின் கள்ளமற்ற நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றளவும் ரிப்பீட் மோட். நினைத்து நினைத்துப் பார்த்தேன் பாடலைக் கேட்டு அழாத நெஞ்சம் கல்நெஞ்சம் அல்லவா. 

அதன்பிறகு வெற்றி, தோல்வி என மாறிமாறி கொடுத்து வந்த செல்வராகவன் சமீபமாக நடிப்பு பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போல மீண்டும் ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்து விட மாட்டாரா என அவரது ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனிபோடும் வகையில் இந்த புத்தாண்டு பரிசாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். 

இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!


ஆமாங்க, 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் எடுக்கப் போவதாக அதிகாரபூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார் செல்வராகவன். அதுவும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் அதே ஏ.எம்.ரத்னம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளாராம். ரவிகிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் கூறுகிறார்கள். சோனியா அகர்வாலுக்கு பதிலாக யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. 

20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் செல்வராகவன். வழக்கமாக இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் முந்தைய படங்களின் எதிர்பார்ப்போடு சென்று ஏமாற்றத்தை தருவதே வாடிக்கை. ஆனால் செல்வராகவனுக்குள் இன்னும் அந்த இயக்குநர் உயிர்ப்போடு இருப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். நாமும் நம்புவோம். 

நினைத்து நினைத்துப் பார்த்தேன், நெருங்கி விலகி நடந்தேன். உன்னால் தானே நானே வாழ்கிறேன். காதுக்குள் ரீங்காரமிடும் இந்த பாடலைப் போலவை ஏங்கி இருக்கிறோம் இரண்டாம் பாகத்திற்காக.. 

இதையும் படிங்க: ரஜினி சொல்லும் கெட்டவன் யார்? புத்தாண்டில் பொடி வைத்து பேசிய ரஜினி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share