×
 

அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஸ்டாலின்… திமுகவிற்கு கொள்ளி வைக்கும் டாஸ்மாக் ஊழல்... அண்ணாமலை அதிரடி..!

முதலமைச்சர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். முதல்வரும் இதில் குற்றவாளிதான். அவரும் இதில் தப்பித்து போக முடியாது.

''இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோசடிக்கார அரசியல்வாதி, அமைச்சர் என்றால் அது செந்தில் பாலாஜிதான்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்துெய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''எங்களது அடுத்த போராட்டம் வரும்  22-ம் தேதி நடக்கலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்து ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். எதை வேண்டுமானாலும் முன்னேறி செல்வோம். அது முதலமைச்சர் வீடாக இருக்கலாம் அல்லது டாஸ்மார்க் அலுவலகமாக இருக்கலாம். ஏனென்றால் முதலமைச்சர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். முதல்வரும் இதில் குற்றவாளிதான். அவரும் இதில் தப்பித்து போக முடியாது.

ஏனென்றால், இது அவரது அமைச்சரவை. அவரது கண்காணிப்பில் இருக்கிறது. ஒரு அமைச்சருக்கு அளவுக்கு அதிகமாக பாசத்தை காண்பித்து இருக்கிறார். ஆக எங்களைப் பொறுத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். இத்தனை நாள் காவல்துறைக்கு மரியாதை கொடுத்து தேதி சொல்லி இருந்தோம். அவர்கள் வேறு மாதிரி அணுகினால், நாங்களும் வேறு மாதிரி அணுகுவோம்.

இதையும் படிங்க: இது மக்கள் ஆட்சியா? மாஃபியா ஆட்சியா? வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜக தலைவர்கள்.. அண்ணாமலை, ஹெச்.ராஜா கண்டனம்..!

எங்களை கைது செய்வது அவர்கள் பயத்தை காட்டுகிறது. நான் பேசக்கூடாது. பேசினால் பல விஷயங்கள் வெளியே வரும். டாஸ்மார்க் ஊழலில் யார் குற்றவாளி என்று நாங்கள் கருதுகிறோமோ? முதலமைச்சரின் உட்பட எல்லோரையும் கைது செய்ய வேண்டும். போராட ஜனநாயகம் முறையில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக் ஊழல் நாற்பதாயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்பது எங்களுடைய அனுமானம். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அமலாக்கத்துறை 1000 கோடி எனச் சொல்லி இருக்கிறது.

அதை வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எங்களை பொறுத்தவரை இந்த ஆயிரம் கோடி என்பது ஒரு சின்ன துரும்புதான். 2024 நாடாளுமன்றத் தேர்தலை திமுக அரசு டாஸ்மாக் பணத்தை வைத்துத்தான் நடத்தி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் டாஸ்மாக் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்துதான் திமுக களமிறங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோசடிக்கார அரசியல்வாதி, அமைச்சர் என்றால் அது செந்தில் பாலாஜிதான்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அவரிடம் கேட்கிறார்கள் ''நீங்கள் எல்லாம் அமைச்சராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். இன்றைக்கு இவர்கள் எல்லாம் உத்தமர்கள் போல வேஷம் போடுகிறார்கள். தலையில் இருந்து கால்வரை ஊழல் ஆட்சி நடைபெறுகிற திமுக ஆட்சியில் ஒரு ஊழல் கிரிமினல் சாராய அமைச்சர். டிரான்ஸ்போர்ட் ஊழலில் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தவர். ஆகையால், செந்தில் பாலாஜி சொல்வதை எல்லாம் சத்திய வாக்காக எடுத்துக் கொண்டார்கள் என்றால் அப்புறம் சத்தியத்திற்கும், நேர்மைக்கும் என்ன மரியாதை இருக்கிறது?

முறைகேடாக வந்த பணத்தில்தான் இந்த ஆட்சியே நடக்கிறது. இல்லை என்று சொன்னால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 48 சதவீதம் டாஸ்மார்க் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசு நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்கிறதா? தமிழ்நாட்டில் இருக்கிறது. டெல்லியில் நடப்பது தமிழ்நாட்டில் நடக்குமா? என்று சொல்வதை விட, டெல்லியை விட தமிழகத்தில் சூழல் மிக மிக மோசமாக உள்ளது. 

தவறு செய்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்கள் செய்த பட்ஜெட் டிராமா, ரூபாய் சின்னம் எல்லாமே அமலாக்கத்துறை சோதனையை முறியடிக்கத்தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நான் குற்றச்சாட்டு வைக்கிறேன்'' என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: E.D-யின் சோதனை அரசியல் பழிவாங்கும் ஓர் முயற்சி.. அமைச்சர் செந்தில் பாலாஜி அவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share