×
 

வெள்ளித்திரையில் "சிறகடிக்க ஆசை"... நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் ஆஃபர்...!

சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியில் வரும் பிரபல நடிகைக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" என்ற சீரியல் தற்பொழுது அனைவராலும் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது. இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு தனித்துவமான தொழில்களையும், குணங்களையும் பிரதிபலிக்கிறது.

ஒரே வீட்டில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த விஜயா, தனது இரண்டு பிள்ளைகளின் மீது மட்டும் அன்புகாட்டுவார். ஆனால் நடு மகனான முத்துவிடம் எப்பொழுதும் வெறுப்பை மட்டுமே காட்டுவார். தனது மூத்த மகனான மனோஜ்க்கும், கடைசி மகனான ரவிக்கும் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் விஜயா முத்துவையும் அவன் சார்ந்த அனைவரையும் மதிக்க கூட மாட்டார். இப்படி இருக்க, மனோஜ் திருமணம் செய்யவிருந்த பெண்ணை முத்து திருமணம் செய்து கொள்வார். இந்த தொடரில் கதாநாயகியாக வலம் வரும் மீனா தற்பொழுது பூக்கடை வைத்தும், கதாநாயகனான முத்து கார்களுக்கு ஓனராகவும் மாறி தற்பொழுது அசத்தி வருகின்றனர். மேலும் இளைய மகனான ரவி, ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவரும் ரெஸ்டாரன்ட் மற்றும்  டப்பிங் போன்ற இடங்களுக்கு சென்று தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தயவு செஞ்சி என்னை வாழ விடுங்க... கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை..!!

இப்படி இருக்க முத்துவின் மூத்த அண்ணனாக மனோஜ்க்கு மனைவியாக இருப்பவர்தான் ரோகிணி, கண்களால் அனைவரையும் மிரட்டும் தொனியில் இருக்கும் ரோகினி, ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பவர். இவர் மனோஜை திட்டமிட்டு ஏமாற்றி தன்னை பணக்கார பெண் என்று சொல்லி, திருமணம் செய்து கொண்டு தற்பொழுது பலசிக்கல்களில் மாட்டி வருகிறார்.

இப்படி இருக்க சிறகடிக்க ஆசை சீரியலில், கதாநாயகிகளாக  மீனா, சுருதி, விஜயா என்று பலர் இருந்தாலும் தன்னுடைய நடிப்பாலும் தன்னுடைய காந்த பார்வையாலும், இன்று தனக்கென லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பவர்தான் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மா.

இந்த நிலையில் தற்போது சல்மா, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். சிறகடிக்க ஆசையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக வரும் இவர், பார்க்க கலராகவும் மாடலாகவும் தெரிவார். இப்படி இருக்க தற்பொழுது, கிராமத்து பெண்ணாக உருவெடுத்து பாவாடை தாவணியில் தன்னுடைய உருவங்களை மாற்றி கலக்கி இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் "நிறம் மாறும் உலகில்" என்ற திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட ஸ்டில்களை சல்மா வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சல்மாவை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீறிப்பாய்ந்து வரப்போகும் 'வாடிவாசல்' திரைப்படம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share