×
 

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் பழைய ஃபாமுக்கு வந்த ஷிவானி நாராயணன்; டைட் டீ ஷர்ட்டில் ஹாட் போஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையானவர் ஷிவானி நாராயணன். 2016-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் அஸீமுக்கு ஜோடியாக நடித்தார்.
 

16 வயதிலேயே ஹீரோயினாக மாறினாலும் இவருடைய முகம் மற்றும் உடல் அளவில் முதிர்ச்சியான இருந்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்தார்.

இதையும் படிங்க: விஜய் படம் வந்தாலே ரிஜெக்ட் பண்ணிடுவேன்.. பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்..!

இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலிலும் கேமியோ ரோலில் ஷிவானி நடித்திருந்தார். தொடர்ந்து விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

அந்த வகையில், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அஸீமுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனது.

இருவரும் ஃபைனல் வரை வந்ததோடு 3-ஆவது இடத்தையும் பிடித்தனர். அதே போல் மீண்டும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் ஜோடி சேர்ந்து நடிக்க துவங்கினர்.

அப்போது தான் அஸீமின் விவாகரத்து பிரச்சனையும் துவங்கியது. ஷிவானி - அசீம் காட்டும் நெருக்கம் தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

அதே போல் ஷிவானியை பல மீடியாக்கள் வசை பாட துவங்கியது. இந்த சர்ச்சையில் இருந்து விலக கடைக்குட்டி சிங்கம் தொடரில் இருந்து சைலண்டாக விலகினார்.

பின்னர் ஜீ தமிழில் ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் நடித்து கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

முதல் நாளில் இருந்து 90-நாட்களை கடந்த பின்னரும் ஒரு விதமான சேப் கேம் இவர் விளையாடியதாகவே பார்க்கப்பட்டது.

பாலாஜி முருகதாஸுடன் காதல் கன்டென்ட்டில் சிக்கினாலும், அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முழுக்க முழுக்க திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் உதடு மற்றும் முக அமைப்புக்காக ஷிவானி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்பட்டது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின்னர் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது பழைய ஃபாமுக்கு திரும்பி இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பேயாக மாறிய ராஷ்மிகா... குழந்தையை பூதமாக மாற்றி இருக்கிறார் டைரக்டர் என நெட்டிசன்கள் புலம்பல்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share