நான் நல்லா இருக்கேன்.. வதந்திகளை நம்பாதீங்க.. உண்மையில் நடந்தது இது தான்.. பாடகி கல்பனா விளக்கம்..!
கல்பனா, தான் மயக்கமான நாளில் என்ன நடந்தது என்பதை குறித்து வீடியோ மூலமாக பகிர்ந்து இருக்கிறார்.
மதுரை டி.ஸ்ரீநிவாஸனிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்று, தனது 5 வயதிலேயே முதல் பாடலை பாட தொடங்கி, மலையாள ஸ்டார் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தன்னை நிலைநாட்டி, தற்பொழுது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது உலக சினிமாக்களில் இதுவரை 1500 பாடல்களுக்கும், 3000க்கும் மேலான மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் தான் கல்பனா.
இப்படி இருக்க,சமீபத்தில் தெலுங்கானாவின் ஐதரபாத்தில் உள்ள நிசம்பத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கல்பனாவின் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார், பூட்டிய கதவை உடைத்து மயங்கி இருந்த கல்பனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தனர். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாடகி கல்பனா எப்படியிருக்கிறார்?... தற்கொலை முயற்சி குறித்து மகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
இதனை தொடர்ந்து, தனிமையில் இருக்கும் கல்பனா தனது மகளை பார்க்க வேண்டும் என நினைத்ததாகவும் அவர் வர மறுத்துவிட்டதால் சோகம் தாங்காமல் கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவியது.இதனை அறிந்த அவரது மகள், எனது அம்மா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இப்படி தவறாக சித்தரிக்காதீர்கள், எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என கூறி இருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது உடல்நிலை சீராக உள்ளதால், மக்களின் குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடந்தது என்ன..? என்பது தொடர்பாக கூறி பாடகி கல்பனாவே வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நான் எல்.எல்.பி மற்றும் பிஹெச்டி படிப்புகளை படித்து வருகிறேன். அதேநேரம், எனது இசை வாழ்க்கையிலும் மிக தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக, எனக்கு மன அழுத்தம் அதிகமா இருப்பதால் சரியாக எனக்கு தூக்கம் வருவதில்லை என மருத்துவரிடம் கூறினேன். அப்போது என்னை பரிசோத்தித்த மருத்துவர்கள், எனக்கு "இன்சோம்னியா பாதிப்பு" இருப்பதாக கூறினர்.
அதற்காக, மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன், ஆனால் சம்பவம் நடத்த நாளில், கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். இன்றைக்கு நான் உயிரோடு திரும்ப வந்ததற்கு காரணம் என் கணவர். அன்று என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் அவ்வளவு கஷ்டப்பட்டார். வெளியூரில் இருந்தாலும் சரியான நேரத்தில் போலீஸ் உதவியோடு வந்து என்னைக் காப்பாற்றினார். அதனால் தான், நான் இன்று உயிர் தப்பித்தேன். இப்படிப்பட்ட கணவர் இருக்கையில் எனக்கு என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்க போகிறது, எதுவும் இல்லை. கடவுளின் அருளால் நல்ல படியாக இருக்கிறேன். ஆதலால் என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!