×
 

தல நரைச்சிப்போன காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? - ஏகே ரசிகர்களை பிபி ஏற்றும் சுசித்ரா!

கார் ரேஸில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்ததை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரை விமர்சித்து பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கார் ரேஸில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்ததை ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரை விமர்சித்து பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு, ரேஸிங் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்காக  “அஜித்குமார் ரேஸிங்” என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிங்கிலும் பங்கேற்றார். அந்த ரேஸில் அவரது அணி 3வது இடம் பிடித்து சாதனைப் படைத்தது. சினிமாவிற்கு அடுத்தப்படியாக அஜித் அதிகம் நேசிப்பது ரேஸிங்கைத் தான். தற்போது அவரது அணிக்கு கிடைத்துள்ள வெற்றி அஜித்குமாருக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை முடித்துக்கொண்டு, ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
  

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா...! ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் அஜித் - வைரல் வீடியோ! 

ஊரே அஜித்குமாரின் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் பாடகி சுசித்ரா மட்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசியுள்ள அவர், வயசான காலத்துல அஜித்குமாருக்கு இதெல்லாம் தேவையா?. சினிமாவில் நடனமாடக்கூட முடியவில்லை. சண்டைக்காட்சிகளில் சரியாக நடிக்க முடியவில்லை. அப்படியிருக்கையில் உடல் வலிமை மிக்கவர்கள் பங்கேற்கும் கார் ரேஸில் ஏன் கலந்து கொள்ள வேண்டும். பேசும் போது கூட மூச்சு வாங்கிக்கொண்டு பேசிகிறார். ஏன் அதிகப்படியான பணத்தைக் கொண்டு போய் கார் ரேஸில் கொட்ட வேண்டும். தமிழகத்தில் உள்ள 4 ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கலாமே?. எனக்கு இப்போது விஷாலைப் பார்த்தால் பாவமாக இல்லை, அஜித்தைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது என வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார். 

சுசித்ராவின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: கேட்டாரே ஒரு கேள்வி...? அஜித் வாழ்க! விஜய் வாழ்க!.. எப்போ நீங்க வாழப் போறீங்க? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share