இரவில் பார்த்த நடிகை பகலில் இல்லை...உலக ரசிகர்களை ஒரு நொடியில் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு!
பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் தென்கொரிய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓடிடி இல்லாத காலங்களிலும் இணையத்தில் தேடி தேடி பார்க்க வைக்கும் படங்கள், சீரிஸ்கள் என்றால் அது கொரியன் படங்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஏனெனில் தாழ்மை,பொறுமை,அன்பு,காதல், என்ற அடிப்படை கருத்தை வைத்தே அனைத்து படங்களும் அமைவதால், ஆண் பெண் பேதமின்றி ரசிகர்கள் பட்டாளம் இங்கு ஏராளம்.தென்கொரிய இசை நிகழ்ச்சி என்றால் பிடிஎஸ்.. அதே சீரிஸ் என்றால் ஸ்குவாடு கேம் இதனை யாராலும் மறுக்க முடியாது.
ஏன் பிடிஎஸ் நிகழ்ச்சியை காண சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வந்த செய்திகளும் தமிழகத்தில் பரவிய நாட்கள் உண்டு. அந்த அளவிற்கு தென்கொரிய படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குயின் ஆப் டீயர்ஸ், கே-டிராமா 'பிளட்ஹவுண்ட்ஸ்' போன்ற தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் 24வயது நிரம்பிய இளம் நடிகை "கிம் சே-ரான்". இவரது வெகுளியான தோற்றமும் அற்புதமான நடிப்பும் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
அதுமட்டுமல்லாமல், 2009ஆம் ஆண்டு வெளியான "எ பிராண்ட் நியூ லைஃப்" திரைப்படத்தில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானவர் தான் கிம் சே-ரான், அப்பொழுது அவருக்கு வயது ஒன்பது. பின் பல படங்களில் நடித்த இவர், லிசன் டு மை ஹார்ட், ஃபேஷன் கிங், தி குயின்ஸ் கிளாஸ்ரூம், லீவரேஜ், நோபடி நோஸ் போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். இந்த நிலையில், தற்பொழுது வெளிவர இருக்கும் "கிட்டார் மேன்" படத்தில் நடித்து முடித்த கிம் சே-ரான், ஞயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சியோலின், சியோங்டாங் என்ற பகுதியில் அமைந்துள்ள கிம் சே-ரான் வீட்டிற்கு சென்ற அவரது தோழி, அவர் இறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டனர். பின்னர் அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எந்த தடயங்களும் கண்டறியப்படவில்லை என தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே, அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், கிம் சே-ரான் உயிர் மறைந்தாலும்...நினைவுகள் ஒருபோதும் அழியாது என ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் யோகி பாபுக்கு என்ன ஆனது? விபத்து குறித்து அவரே விளக்கம்!