×
 

லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..!

படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் ஒப்பந்தங்கள் அதற்கு முன்பே கையெழுத்தாகி விட்டன.தற்போது, ​​ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு அலுமினிய தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி தனது படங்களை பிரம்மாண்டமாகவும், வெற்றிப்படமாகவும் இயக்குவதில் வல்லவர். அவர் படத்தில் எவ்வளவு பெரிய நட்சத்திரங்கள்டித்தாலும் தனக்கென ஒரு பாணியை கையால்பவர்.பாகுபலியில் நடந்தது போலவே, ஆர்.ஆர்.ஆர் படத்திலும் சில உத்திகளை ராஜமெளலி பயன்படுத்தினார். இப்போது எஸ்.எஸ்.எம்.பி-29 படத்திலும் ஒரு வித்தியாசமான ஒப்பந்த்தை  ஹீரோ மகேஷ்பாபு- ஜஹீரோயின் பிரியங்கா ஜோப்ராவுடன் போட்டுள்ளார். இந்தப் ப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரியங்கா சோப்ராவும்,மகேஷ் பாபுவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ராஜமௌலி தனது படத்தை பற்றிய தகவல்கள் வெளியே கசியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதற்காக அவர் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார்.இந்தப்படத்தின் கதை காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின் போது ராஜமௌலி எந்த கவனக்குறைவையும் விரும்பவில்லை. அதாவது படத்தை பற்றிய எந்தத் தகவல்களும் வெளியே சொல்லக்கூடாது.எல்லாத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.அதற்காக படக் குழுவினருடன் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். படப்பிடிப்பின் போது, ​​படங்களின் காட்சிகள் கசிந்து, சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி, கதையின் சில பகுதிகள் வெளிப்பட்டுவிடும்.

இதையும் படிங்க: ‘நீங்கள் இந்தியர் இல்லையா..?’ ஒரே ஒரு ட்வீட்டால் நொந்து தவிக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி..!

ராஜமௌலி தனது பெரிய பட்ஜெட் படத்தின் எந்த காட்சியும் முன்கூட்டியே கசிந்து போவதை விரும்பவில்லை. இதற்காக மகேஷ் பாபு-பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட முக்கிய குழுவினருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, எந்தவொரு உறுப்பினரும் படத்தைப் பற்றி எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் கூட முடியாது.ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், படத்தின் விவரங்களை அவர்கள் கசியவிட்டால், ஒப்பந்தத்தின்படி, அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

இப்போதைக்கு, ராஜமௌலி எவ்வளவு அபராதம் விதிப்பார், முக்கிய உறுப்பினர்கள் எப்படி அபராதத்தை செலுத்துவார்கள் என எந்தத் தகவல்களும்வெளியாகவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, படத்தின் எந்த விவரமும் வெளிப்படும் அளவுக்கு யாரும் தவறு செய்ய மாட்டார்கள். எதுவும் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, நடிகர்கள் தங்கள் தொலைபேசிகளை படப்பிடிப்பு தளத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் ஒப்பந்தங்கள் அதற்கு முன்பே கையெழுத்தாகி விட்டன.தற்போது, ​​ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு அலுமினிய தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 

இதையும் படிங்க: ‘நீங்கள் இந்தியர் இல்லையா..?’ ஒரே ஒரு ட்வீட்டால் நொந்து தவிக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share