×
 

தமன்னாவுக்கு பிரேக்கப்.. விஜய் வர்மாவை டெலிட் செய்ய காரணம்..?

தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆல்ரவுண்டாக நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தனது காதலரை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் வெப்சீரிஸிலும் கலக்கினார். 

ஆரம்பத்தில் மார்டனாக நடித்த தமன்னா வெப்சீரிஸ்களில் கிளாம்ருக்கு மாறினார். லஸ்ட் ஸ்டோரி, நவம்பர் ஸ்டோரி, ஜீ கர்தா போன்ற வெப் சீரிஸ் ஆபாசத்தையும், கெட்ட வார்த்தைகளையும் நேரடியாக கொண்டுள்ளன. இதனால் தமன்னாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த வா காவாலா பாடல் டிரெண்டிங்கில் இருந்ததுடன், பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. 

இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி மோசடியில் தமன்னாவுக்கு தொடர்பா?

தொடர்ந்து கிளாமர் பக்கம் கவனம் செலுத்தி வரும் தமன்னா இணையத்தில் போஸ்டர், வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை பிசியாக வைத்திருந்தார். இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரியில் நடித்த இந்தி நடிகர் விஜய்ர் வர்மாவை தமன்னா காதலிக்க தொடங்கினார். இருவரும் காதலிப்பது வைரலானது. இதை உண்மையாக்கும் விதமாக விஜய் வர்மாவுடன் வெளிநாட்டு பயணம், நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்பது என தமன்னா வலம் வந்தார்.

இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமன்னா, விஜய் வர்மா தங்களின் வலைதள பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், நண்பர்களாக இருக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: போலீஸ் பிடியில் தமன்னா,காஜல் அகர்வால்...பல கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய பின்னணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share