×
 

வாழ்நாளில் இனி அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டேன்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உறுதிப்பட முடிவு.!

இனி வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் அவரது மகனுடன் இணைந்து ‘பிரம்மா ஆனந்தம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி பங்கேற்று பேசினார்.ந டிகர் பிரம்மானந்தத்திற்கும் தனக்கும் உள்ள நட்பு குறித்து பேசிய சிரஞ்சீவி, மற்ற விஷயங்கள் குறித்தும் பேசினார்.  அரசியல் குறித்து சிரஞ்சீவி பேசுகையில், “வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் இருந்து விலகியிருக்கவே போகிறேன். அரசியல் தலைவர்களைச் சந்திப்பு திரைப்படத் துறைக்கான தேவைகளுக்காக மட்டுமே இருக்கும். அரசியலில் இருந்து விலகிவிட்டதால், என் முழு கவனமும் சினிமாவில் இருக்கும்.


மீண்டும் நான் அரசியலுக்கு வரவிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களுக்காகவும் படங்களுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய இலக்குகள் அனைத்தும் பவன் கல்யாண் மூலம் நிறைவேற்றப்படும்” என்று சிரஞ்சீவி பேசினார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்கிற கட்சியை சிரஞ்சீவி தொடங்கினார். 2009 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் பிரஜா ராஜ்ஜியம் வெற்றி பெற்றது. அப்போது சிரஞ்சீவி சினிமாவில் இருந்து விலகினார். பின்பு 2011இல் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் சிரஞ்சீவி பணியாற்றினார். 2018இல் முழுமையாக அரசியலில் இருந்து விலகிய அவர், சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய கட்சியில் இளைஞரணி தலைவராக இருந்த பவன் கல்யாண், தனியாக ஜனசேனா என்கிற கட்சியைத் தொடங்கி தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கிறார். 

இதையும் படிங்க: "வயதானாலும், நடிகைகளும் திறமைசாலிகள்தான்" 53 வயதான மனிஷா கொய்ராலாவின் ஆதங்கம்

இதையும் படிங்க: 'திருமணத்தில் பேரின்பம் காண்பேன்" : 21 வயது ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டி, தற்போது வைரல்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share