×
 

என்ன மனுஷன்ய்யா... உலகையே திரும்பி பார்க்க வைத்த அனோரா!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சில் 97வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சில் 97வது ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. உலகளவில் சிறந்த படங்கள் ஆஸ்கர் விருதை பெற பரிந்துரைக்கப்பட்டன. இந்திய சார்பில் இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்த அனுஷா என்ற குறும்படமும் நாமினேட் ஆகி இருந்தது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் 23 விருதுகள் வழங்கப்பட்டன.  சிறந்த படைப்புகள், கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

அந்த வகையில் ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இதில் மார்க் எடேல்டின், யுரிய் போரிசவ், லுனா சோவியா மரிடானா , கரேன் கராகுலியன், வச்சே டோவ்மாஸ்யன், அலெக்ஸி செரிப்ரியாகோவ் ஆகியோர் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

கடந்த ஆண்டு ரிலீசாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றது. கடைசியாக சிறந்த அசல் திரைக்கதை சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர் துறைநடிகர் என ஐந்து விருதுகளை வென்றது. 

ஒவ்வொரு முறையும் அனோரா படத்துக்கு விருது அறிவிக்கப்பட்ட போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஷான் பேக்கர் விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது இந்த விருதை தனதுக்கு பெற்று கொடுத்த பாலியல் தொழிலாளர்களின் சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளிகள் தன்னிடம் சொன்ன தகவல்களை கேட்டு அதன் விளைவாக உருவானதே அனோரா திரைப்படம் என்றார்.

மேலும் இந்த படத்தின் மூலம் பாலியல் தொழிலாளிகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் கூறி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார். ஒரே மேடையில் 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற அனாரா திரைப்படம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் WGA விருதையும், IndieWire விருதையும் வென்றது.  

கடந்த மே மாதம் கேன்ஸில் திரைப்படவிழாவில் அனாரா திரையிடப்பட்டது, இதுமட்டுமில்லாமல் BAFTA திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசன் பெற்றோர். பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ஆஸ்கர் திரைப்படம் இத்தனை விருதுகளை பெற்றதால் இணையத்தில் அனாரா வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த விருது குறித்து பேசிய நடிகை மிகே, பாலியல் தொழிலாளிகளுக்கு தான் என்ரும் நண்பராக இருப்பேன் என உணர்ச்சிவசப்பட்டு கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சிகரெட் பிடிக்கும் ஜோதிகா...சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share