வாட்டிய வறுமை... ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட சமந்தா..! நம்பியாராய் மாறிய கதை..!
சமந்தாவும் சரும நோயும் பிரிக்கவே முடியாத ட்வின்ஸ் ஆகிவிட்டார்கள். அதிக வெப்ப விளக்குகளை அவர் சருமம் தாங்குவதில்லை.
‘பாணா காத்தாடி’தான் சமந்தா நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப்படம். அதற்கப்புறம் ‘மாஸ்கோவின் காவேரி’ வந்தது. ஆனால் அவர் முதலில் கமிட் ஆனது எந்த படத்தில் என்பதை பற்றியெல்லாம் இப்போது ஆராய்வது வேஸ்ட்.
சமந்தா ஒரு முறை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்தபோது ஏற்பட்ட போராட்டக் கதை தெரியுமா? ஒரு காலத்தில் அவருக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காத சூழல். இப்போது அவரது சொத்து மதிப்பு 100 கோடிக்கும் அதிகம்.
சமந்தா இன்னும் பாலிவுட்டில் நடிக்கவில்லை என்றாலும், அவரது புகழும் அங்கு குறையவில்லை. இந்தி ரசிகர்களும் சமந்தாவின் படங்களைப் பார்ப்பதை விரும்புகிறார்கள். புஷ்பாவில் ம் சொல்றியா மா ம்ஹூம் சொல்றியா..? என்ற ஐட்டம் பாடலில் சமந்தா நடித்திருந்தில் இருந்து அவரது ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. சமந்தா இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியிருந்தது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டேட்டிங்... விஜய் மறைத்த சீக்ரெட்... ஜோடியை பாங்காங் அழைத்துச்சென்ற மேனேஜர்..!
சமந்தாவே தனது போராட்டமான நாட்களைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பித்தேன். மாடலிங் செய்யும்போது நான் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றது. பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் வீட்டில் நிதி நிலைமை சரியில்லை. அதனால்தான் நான் சீக்கிரமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
ஆமாம், ஆனால் மாடலிங் நாட்களில் வேலை செய்வது எளிதாக இருக்கவில்லை. பல சமயங்களில் நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியிருந்தது." இருப்பினும், சமந்தா தனது போராட்ட காலத்தில் என்ன வேலை செய்தார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
சமந்தாவின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு சொத்து ரூ.101 கோடி. ஒரு படத்திற்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார். விளம்பரங்கள் மூலமும் வருமானம் வந்து குவிகிறது. படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் நம்பியார் வேறு. பக்தர்! அது மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் ரொம்ப சுத்தர்!
வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் சரி, உள்ளூர் படப்பிடிப்பு என்றாலும் சரி. சொந்த சமையல்தான் அவருக்கு. இதன் காரணமாகவே ஆரோக்கியமாக இருந்தார் அவர். சரி போகட்டும்… இப்போது எதற்கு அவர் பேச்சு? சமந்தாவும் நம்பியாராகிக் கொண்டிருக்கிறாரே, அதனால்தான்.
சமந்தாவும் சரும நோயும் பிரிக்கவே முடியாத ட்வின்ஸ் ஆகிவிட்டார்கள். அதிக வெப்ப விளக்குகளை அவர் சருமம் தாங்குவதில்லை. சரி, அவுட்டோரில் எப்படி? அதிக சூரிய வெளிச்சத்தையும் அது தாங்குவதில்லை. எப்படியோ, போராடி விரதமிருந்து டாக்டருக்கு பெருமளவு பணத்தை அழுது, எல்லார் போலவும் நார்மல் நிலைக்கு வந்துவிட்டார். இருந்தாலும் சரும விஷயத்தில் அஜாக்ரதையா இருக்கலாகாதும்மா என்று கூறிவிட்டாராம் மருத்துவர். வீட்டு சாப்பாடு தவிர வேறு எதை வாயில் வைத்தாலும் அது தன் ஆக்ரோஷயத்தை தோலில் காட்டிவிடும் என்று எச்சரித்துவிட்டாராம்.
இப்போதெல்லாம் உள்ளுர் படப்பிடிப்போ, வெளியூர் படப்பிடிப்போ? தன்னுடன் ஒரு சமையல்காரரையும் அழைத்து சென்றுவிடுகிறார் சமந்தா. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட சமந்தா இப்போதெல்லாம் சமையல் மாஸ்டையும் ஷூட்டிங் ஸ்பாட்டு அழைத்துச் செல்கிறார்.
இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...