அஞ்சலை அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்..! படப்பிடிப்பு இடைவேளையில் கொஞ்சம் அரசியல்...!
தமிழக வெற்றிக் கழகத்தின் 5 சித்தாந்த வழிகாட்டிகளில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் நினைவு நாளில் அவரது உருவச்சிலைக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய போது பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய 5 பேரை சித்தாந்த வழிகாட்டிகளாக அறிவித்தார். மேலும் அந்த 5 பேரின் உருவச்சிலைகளை தன்னுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவினார். இன்று அவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் ஆகும்.
முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்னால், கடைசியாக ஒருபடத்தில் விஜய் நடித்து வருகிறார். அதன் படபிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த படபிடிப்பின் மதிய உணவு இடைவேளையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார் நடிகர் விஜய்.
இதையும் படிங்க: பணம் கேட்டா கொடுக்க மாட்டியா? பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. தலைமறைவான தவெக நிர்வாகிக்கு வலை!
கருப்பு நிற அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அவர் அணிந்திருந்தார். வந்தவர், அஞ்சலை அம்மாளின் மார்பளவு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகளில் ஒருவர் கூட அப்போது அங்கு காணப்படவில்லை.
ஒருவேளை அஞ்சலை அம்மாளின் நினைவுதினம் என்பதை நடிகர் விஜய் மறந்து விட்டாரா? படபிடிப்பின்போது யாரேனும் நினைவுபடுத்தினார்களா? என்பது தெரியவில்லை. மாலை அணிவிக்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் ஒருவர் கூட அங்கு இல்லாதது இந்த கேள்விகளை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் என்ற எக்ஸ் பக்கத்தில் அஞ்சலை அம்மாளுக்காக பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், ""நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்."" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!