×
 

"மதராஸி நஹீ மதுர வாசி"..மெர்சல் டு மதராஸி.. முருகதாஸ் கொடுத்த ட்வீஸ்ட்..!

வட சென்னை பகுதிகளை மட்டுமே மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் வட இந்தியாவை குறித்து படம் எடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஒருவர்.

"மதராஸி நஹீ மதுர வாசி" இந்த டயலாக் எங்கையோ கேட்டதை போல் இருக்கிறதே என்று சொல்லுபவர்களுக்கு மட்டுமே தெரியும், இது மெர்சல் படத்தில், வட இந்தியாவுக்கு சென்ற விஜயை குறித்து பெருமையாக கதாநாயகி நித்யா மேனன் பேசுவது என்று. இதில் 'மதராஸி' என்ற வார்த்தை மிகவும் முக்கியம். ஏனெனில் தமிழ்நாட்டின் தலைநகரம் என்றால் சென்னை, அது இப்பொழுது அழைக்கின்ற பெயர். ஆனால் இதற்கு முன் மதராஸ் என்று அழைக்கப்பட்டது காலப்போக்கில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது.

ஆனால் மதராஸ் என அழைத்ததை நாம் மறந்தாலும் இன்றளவும் மறக்காதவர்கள் வட இந்தியர்கள். நீங்கள் டெல்லி போன்ற வட இந்திய பகுதிகளுக்கு செல்லும் போது பெரும்பாலும் நம்மை தமிழர்கள் என்று அழைப்பதை விட 'மதராஸி' என்றே அழைப்பார்கள். பொதுவாக நல்ல பழைய நினைவுகளை மறக்க கூடாது என்பார்கள் ஆனால் நம் ஊர் பெயரை நாம் மறந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை மதராஸி என்று மறக்காமல் அழைப்பவர்கள் வட இந்தியர்களே.

இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! 

தற்பொழுது தமிழகத்தில் பல படங்கள் வெற்றியை தந்தாலும் பெரும்பாலும் வட சென்னை பகுதியை பற்றி பேசாமலோ..காண்பிக்காமலோ.. இருந்ததில்லை. இதில் வட சென்னையை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என காண்பித்து அவர்களை மன வேதனை அடைய செய்தும் உள்ளனர். இப்படி இருக்க இன்னும் எத்தனை நாட்கள் தான் வட சென்னை பார்வையை குறித்து பேசுவீர்கள், வட இந்தியர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பாருங்கள் என்று சொல்லி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றாலே மக்களுக்கு ஒரு கருத்தை முன்வைத்தே எடுப்பார். உதாரணத்திற்கு சர்க்கார் அரசியல், கத்தி விவசாயிகள் பிரச்சனை, துப்பாக்கி ராணுவம் என பல பரிமாணங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் படத்தை மட்டுமே எடுத்திருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியானது. அதன்படி அப்படத்தின் பெயர் தமிழில் "மதராஸி" என்றும் இந்தியில் "தில் மதராஸி" என்றும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, மதராஸி என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்து உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்கிறார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது, இப்படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்று பெயர் வைத்த முருகதாஸ், இந்தியில் "தில் மதராஸி" என குறிப்பிட்டு உள்ளது ஏன்? தில் என்றால் மனசு அப்பொழுது "வட இந்தியர்களின் மனதை திருடிய மதராஸி" என்று சொல்ல வருகிறார் போல என நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share