×
 

‘பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்தார்..? த்ரிஷா அமைச்சராகப் போகிறார்..! மன்சூர் அலிகானின் வில்லங்கப் பேச்சு..!

எப்படியோ நடிகை த்ரிஷா விரைவில் அமைச்சராகிவிடுவார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

‘‘72 வயது பெரியார் சுடுதண்ணீ வச்சி குடுக்க கை- கால் புடுச்சி விட தான் 38 வயது மணியம்மையை கல்யாணம் செய்தார். நீங்க நெனக்கிற மாதிரி ஒன்னும் இல்லை’’ என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசினார். அது வைரலாகி வருகிறது. ‘‘கங்குவா படத்துல நடிச்சேன். ஆனா படத்துல ஒண்ணுமே காணோம். என் தலை மட்டும் அங்கங்கே தெரியுது. அவ்வளவு கேவலப்படுத்துறாங்க. கதாபாத்திரம் சரியா கொடுக்கிறதில்ல. வாயை மூடி ஒரு நடிகனா நான் எப்படி கடந்து செல்ல முடியாது.

என்னுடைய படத்தை என்னுடைய சொந்த கைகாசை போட்டு நிறைய நடிகர், நடிகைகளை வைச்சி சரக்குனு ஒரு படத்தை எடுத்தேன். அதை வெளியிடுறதுக்கே தடுக்குறாங்க. நடிகர் சங்கம் நக்கிட்டு கிடக்கு. தயாரிப்பாளர் சங்கம் படுத்துட்டு கிடக்கு யாரும் எந்திரிக்கவே இல்லை.  ரஜினி பயந்தாங்கோளி’’ என்றவர் நடிகை த்ரிஷா விவகாரத்தை மீண்டும் கொளுத்திப்போட்டு இருக்கிறார்..

இதையும் படிங்க: 40 வயசுலயும் 20 வயசு பீலிங்! மாடர்ன் ட்ரெஸில் த்ரிஷா கொடுத்த முரட்டு போஸ்!

‘‘நான் நடிகை த்ரிஷா குறித்து முன்பு தவறாக எதுவுமே குறிப்பிடவில்லை. நான் பேசியதை திரித்து, வெட்டி, ஒட்டி செய்தியாக்கிவிட்டார்கள். எப்படியோ நடிகை த்ரிஷா விரைவில் அமைச்சராகிவிடுவார்’’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே த்ரிஷா பற்றி பேசி வழக்கு வரை சென்றது.  த்ரிஷா அமைச்சராகிவிடுவார் என எதன் அடிப்படையில் கூறுகின்றார்? விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் த்ரிஷா இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்று, அதன் பின்னர் அமைச்சர் ஆகிவிடுவார் என்கிற அர்த்தத்தில் அவர் கூறினாரா? என விவாதங்கள் எழுந்துள்ளது.


விஷால் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு, நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும். குஷ்புவைப் பார்த்ததுமே கட்டிப்பிடித்து முத்தங்களை வாரி வழங்குகின்றார். குஷ்பு இன்னொருவர் மனைவி, விஷால் சமூகத்தில் ஒரு பதவியில் இருப்பவர். பொது வெளியில் இப்படி நடக்கக்கூடாது இல்லையா? படத்தில் நடிப்பது வேறு, ஆனால் பொது வெளியில் அது அநாகரீகம். குஷ்புவின் கணவர் சுந்தர் சி பாவமில்லையா?’’ என்றெல்லாம் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதையும் படிங்க: 54 வயதிலும் அம்புட்டு அழகு... யங் ஹீரோயின்ஸை ஓரங்கட்டும் நடிகை குஷ்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share