கோடீஸ்வரனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா... அனோரா கதை தெரியுமா?
ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் 5 விருதுகளை வாங்கி குவித்துள்ள நிலையில் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் 5விருதுகளை வாங்கி குவித்துள்ளது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அனோரா சாதாரணம் படமாக இல்லை. இது பாலியல் தொழிலாளின்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளி செய்யும் பெண்ணுக்கு காதல் வந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும், அவளது திருமண வாழ்க்கையில் வரும் தடைகள் என்ன என்பது குறித்து எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான் பேக்கர்.
ரெட் ராக்கெட், தி ஃப்ளோரிடா புராஜெக்ட் படைப்புகள் மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் ஷான் பேக்கர். இவரது அடுத்த படைப்பான வெளியாது தான் அனோரா. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மிக்கி மேடிசன், பால் வைஸ்மேன், யூரி போரிசோவ், லிண்ட்சே நார்மிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனோரா கதையை ஒன்லைனில் சொல்ல வேண்டும் என்றால், பாலியல் தொழிலாளிக்கும், பணக்கார ஹீரோவுக்கும் ஏற்படும் காதல் தான்.
இந்த ஒரு கான்செப்டை வைத்து கொண்டு திரைக்கதையை இயக்கிய ஷான் பேக்கர் விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். சரி கதைக்குள் போகலாம். அனோரா என்ற அனி தான் கதையின் ஹீரோயின். இவர் பார் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து தனது தேவைகளை அனி பூர்த்து செய்து வருகிறார். பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் அனிக்கு பாலியல் தொழிலில் டிமாண்ட் அதிகமாக இருந்தது. இதனால் தொழிலில் நம்பர் ஒன்னாகவும் அனி இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!
அனியின் குழந்தைத்தனமான பேச்சு, கவர்ச்சிகரமான அழகு, அவளின் தூய்மையான மனம் மற்றவர்களை காட்டிலும் அவளை தனித்துவமாக காட்டியது. இதனால் ஈர்க்கப்பட்டவன் தான் ஹீரோ வான்யா. முதல் பார்வையிலேயே அனி மீது ஹீரோவுக்கு காதல் ஏற்படுகிறது. மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகனான வான்யா அனியை அடிக்கடி சந்தித்து பேசுகிறார். அனியுடன் நேரத்தை செலவிட வேண்டும் என நினைத்த வான்யா, ஒரு முடிவெடுக்கிறார்.
ஒருவாரத்துக்கு 15000 டாலர்கள் கொடுத்து அனியை தன்னுடனே இருக்கும்படி விலை பேசி விடுகிறார். இந்த ஒருவாரமும் அனி பாலியல் தொழிலாளியாக இல்லாமல் வான்யாவின் காதலியாக வாழ்கிறாள். இருவரும் வெளியே செல்கின்றனர். மகிழ்ச்சியாக பேசி சிரிக்கின்றனர். அனியுடனான நெருக்கம் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் வான்யா. இது வான்யாவின் கோடீஸ்வர பெற்றோருக்கு தெரிய அவர்கள் உச்சக்கட்ட கோபத்துக்கு செல்கின்றனர்.
தனது மகனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா என ஆத்திரம் கொண்ட பெற்றோர் அனியை பழிவாங்க நினைக்கின்றனர். அதற்கான ரவுடிகளை ஏவி வில்லத்தனத்தை காட்டுகின்றனர். அந்த சிலரால் அனிக்கு பிரச்சனை வருகிறது. இறுதியில் அனியை ஹீரோ ஏற்று கொண்டாரா, இருவருக்கும் திருமணம் நடந்ததா என்பதை கூறுவதே அனோரா படத்தின் கிளைமாக்ஸ். வழக்கமான கதையாக இருந்தாலும் இதை அழகாக கையாண்ட இயக்குநர் ஷான் பேக்கரின் படைப்பும், நடிகர்களின் நேர்த்தியான நடிப்பும் இப்படத்தை கொண்டாட வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!