குடோனுக்குள் அடைக்கப்படும் சாமுண்டேஸ்வரி.. கல்யாணத்தை நிறுத்திய ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரியை கடத்தி சென்ற நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
கார்த்தியின் கார் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று, கார்த்திக்கும் ரவுடிகளுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது, அடுத்து ரவுடிகள் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல கார்த்திக் பின்புறத்தில் சாமுண்டீஸ்வரிவை வாயை பொத்தி கடத்தி செல்வதை கவனிக்கிறான்.
மறுபக்கம் ரேவதி, மகேஷை மணமேடையில் உட்கார வைத்து மந்திரம் ஓத மாயா எல்லாருக்கும் அட்சதை கொடுக்கிறாள். சந்திரகலா எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என அவசரப்படுகிறாள்.
தாலி கட்ட போகும் சமயத்தில் ரேவதி முடியாது.. அம்மா இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என தடுத்து விடுகிறாள். இதனால் மாயா, சந்திரகலா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி; கல்யாணத்தில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
சிவனாண்டி சரி வெயிட் பண்ணி பார்க்கலாம் என சொல்ல மண்டபத்தில் எல்லாரும் சாமுண்டீஸ்வரிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இங்கே ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்கின்றனர், கார்த்திக்கும் அந்த வேனை பின்தொடர்ந்து குடோனுக்கு வந்து சேர்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: மாயா போட்ட புது நாடகம்.! ரேவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட் !