மகேஷ், மாயா உறவை அம்பலப்படுத்த கார்த்திக் போடும் திட்டம்? நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு கிப்டாக வந்து நகையை கார்த்திக் மறைத்து வைத்து மாயாவை சாமுண்டீஸ்வரி திட்டுவாங்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மகேஷ் மற்றும் மாயா என இருவரும் வீட்டில் எப்படியாவது இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க அப்போது கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் உள்ளே வருகின்றனர்.
கல்யாணத்துக்காக மகேஷுக்கு கோர்ட் எடுக்கணும் சாமுண்டீஸ்வரி அம்மா கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி அழைக்க மகேஷ் மறுக்க முடியாமல் அவர்களுடன் கிளம்பி செல்கிறான்.
இதையும் படிங்க: நகையை வைத்து மாயாவை சிக்க வைத்த கார்த்திக்.! பொங்கி எழுந்த ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !
பிறகு இவர்கள் கடைக்கு வந்து கோர்ட் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் ராஜராஜனுக்கு போன் போட்டு சொன்ன பிளானை செய்து முடித்திடுங்க என்று சொல்கிறான். அடுத்ததாக ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரி உங்கள பாக்கணும்னு சொன்னா.. உங்க போன் ரீச் ஆகவே மாட்டேங்குது கோவில்ல இருக்காங்க போய் பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறான்.
மாயா ஒரு ஆட்டோவில் கிளம்ப வழியில் அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்கிறது. இதற்கிடையில் யாரோ ஒருவன் மாயாவின் கவனத்தை திசை திருப்பி அவளது போனை கைப்பற்றுகிறான். கடைசியில் இது அனைத்தும் உண்மையை வர வைப்பதற்காக கார்த்திக் போடும் திட்டம் என தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: மாயா - மகேஷ் கள்ள உறவு பற்றி அறியும் சாமுண்டீஸ்வரி... நடந்தேறும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !