டிரம்பிற்கு எதிராக பேசினால் 5 லட்சம் கோடி.. உக்ரைன் அதிபரை மிரட்டும் அமெரிக்கா..!
அமெரிக்கா இந்தப் பணத்தை உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள், பிற உதவிகள் செய்ததற்காகக் கேட்டு வருகிறது.
ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில் அமெரிக்கா, உக்ரைன் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறி வரும் கருத்துகளுக்காக அமெரிக்கா இப்போது அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ''டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது'' என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால், டிரம்பின் கூறுவதை உக்ரைன் ஏற்றுக்கொண்டு ஒரு சமரசத்திற்கு வர வேண்டும்.
அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5 லட்சம் கோடி) மதிப்புள்ள கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதை உக்ரைன் மறந்துவிட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்கா இந்தப் பணத்தை உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள், பிற உதவிகள் செய்ததற்காகக் கேட்டு வருகிறது.
வால்ட்ஸின் இந்த பேச்சு ஜெலென்ஸ்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகக் கருதப்படுகிறது.ஜெலென்ஸ்கி அதிகமாகப் பேசினால், டிரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. உக்ரைன், அமெரிக்காவுடன் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அடுத்த கட்டம் குறித்து விவாதிப்போம்'' என எச்சரித்துள்ளார் வால்ட்ஸ்.
இதையும் படிங்க: கடும் எதிர்ப்பு..! ஜஸ்ட் மிஸ்.. தப்பித்த காஷ்யப் பட்டேல்.. முதல் இந்திய வம்சாவளி FBI தலைவர்..!
ரஷ்யாவுடனான ஒப்பந்தம் தொடர்பாக உக்ரைன் அதிபர் மீது டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று வர்ணித்தார். ''ஜெலென்ஸ்கி உக்ரைனில் தேர்தல்களை நடத்தவில்லை. சட்டவிரோதமாக ஆட்சியில் இருக்கிறார்.ஜெலென்ஸ்கியை ஒரு பிரபலமற்ற தலைவர். என்றும் டிரம்ப் வர்ணித்துள்ளார்.
மறுபுறம், ஜெலென்ஸ்கி, டிரம்பிற்கு எதிராக ''அவர் பொய்யர்களிடையே அமர்ந்திருப்பவர்'' என்று பதிலடி கொடுத்தார். உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே விரைவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால், அங்கு நிலவும் சூழல்கள் காரணமாக இன்னும் ஒரு முட்டுக்கட்டை நீடிக்கிறது.
2014 க்கு முன்பு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை மீண்டும் பெற உக்ரைனும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக, போரின்போது ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்யா திருப்பித் தர வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது. இராணுவப் பயிற்சிகளை நடத்துவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது, பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக ரஷ்யா மீது கட்டுப்பாட்டை உக்ரைன் விரும்புகிறது.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!