காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் ஏதாவது ஒன்றைப் பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பாக மணி சங்கர் அய்யர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு மணி சங்கர் அய்யர் பேட்டி அளித்தார். அதில், "ராஜீவ் காந்தி விமான பைலட்டாக இருந்தார். ஆனால், தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். நான் அவருடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அங்கு அவர் தோல்வியடைந்தார். பிறகு கேம்பிரிட்ஜில் படித்தபோதும் தோல்வி அடைந்தார். கேம்பிரிட்ஜில் தோல்வி அடைவது என்பது கடினம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எளிது.

ஏனென்றால், பல்கலைக்கழகம் தனது இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரையும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்தவே முயற்சிக்கும். பின்னர் அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரி தேர்விலும் தோல்வி அடைந்தார். இரண்டு முறை தோல்வி அடைந்தவர் எப்படி பிரதமராக முடிந்தது? அவர் பிரதமரான போது ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அவர் ஒரு சிறந்த பிரதமர் என்பதை நிரூபித்தார்." என்று மணி சங்கர் தெரிவித்தார்.
மணி சங்கர் அய்யரின் இந்தப் பேச்சு
காங்கிரஸ் கட்சி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் அய்யரை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் கூறுகையில், "தேர்வில் ஃபெயிலாவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், ராஜீவ் அரசியலில் ஃபெயிலாக வில்லை.
இதையும் படிங்க: மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைத் தேடுங்கள்.. ஐஎம்எப் அறிக்கை குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்..!

பிரதமர் ஆக அவர் சிறந்த வெற்றியைப் பெற்றார். அவர் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்தார். தகவல் தொடர்பை மேம்படுத்தினார். அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார். ஐந்தாண்டுகளில் இதுபோன்ற சாதனை படைத்தவர்கள் வெகு சிலரே." என்று மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...!