×
 

ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..!

ஆதியின் சப்தம் படம் வெளியாக உள்ள நிலையில், அவர் நிக்கி கல்ராணியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வெளிவந்த மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் ஈரம், அரவான், போன்ற படங்களை நடித்து இருந்தாலும், இவரது சிறந்த படம் என்றால் அது மரகத நாணயம் தான். இதனை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் ஆதியும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சப்தம்.

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்தவர்கள் தங்களது முதல் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி எனது முதல் காதலனுடன் வாழப் போகிறேன்... நடிகை சமந்தா ஓபன் டாக்..!

சப்தம் படத்தை பார்த்து ரசித்த அனைவரும், இயக்குநர் அறிவழகன், ஆதி மற்றும் தமன் ஆகியோரை பாராட்டுவதுடன் படம் சிறப்பாகவும் தரமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இதோ, அந்த பதிவுகள் அனைத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு படத்திற்கு இலவசமாக ப்ரமோஷன் செய்து உள்ளனர். 

இந்தநிலையில்,ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் விவாகரத்து செய்யபோகிறார்கள் என சமூக வலைகளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் நடிகர் ஆதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆதி கூறுகையில், நிக்கி கலராணியுடன் தனது காதல் கலந்த திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் சில யூடியூப் சேனல்கள் பணம் சம்பாரிக்கும் நோக்கில், எங்களுக்கு விவாகரத்து ஆகபோவதாக கூறி வீடியோ வெளியிடுவது இருவருக்கும் வலியை ஏற்படுத்துவதாக உள்ளது எனவும் கோபமாக கூறியுள்ளார்.

இந்த பதிவுகளை பார்த்த ஆதியின் ரசிகர்கள் பணத்துக்காக இப்படி செய்யும் யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க: சிவனைப் பார்த்து மிரண்ட இந்திரஜா சங்கர்... பக்தி பரவசத்தில் பரதம் ஆடிய வீடியோ வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share