40 வயசுலயும் 20 வயசு பீலிங்! மாடர்ன் ட்ரெஸில் த்ரிஷா கொடுத்த முரட்டு போஸ்!
நடிகை த்ரிஷா 40 வயதை எட்டிய பின்னரும், இளமையான லுக்கில் மாடர்ன் டிரஸ் அணிந்து கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக மட்டுமே நடித்து, தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளவர் தான் நடிகை த்ரிஷா.
90'ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தான், இப்போதைய 2K கிட்ஸின் ஃபேவரட் நாயகி.
இதையும் படிங்க: ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?
என்னதான் அடுத்தடுத்து பல புதிய நடிகைகள் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தாலும், ஓல்டு இஸ் கோல்ட் என்கிற பழமொழிக்கு ஏற்ப தற்போது இவர் தான் லைம் லைட்டின் உச்சத்தில் உள்ளார்.
கைவசம் அரைடஜன் படங்கள் இருந்தாலும், அடுத்தடுத்து தல - தளபதி என மாறி மாறி ஜோடி போட்டு வருகிறார்.
'லியோ' திரைப்படம் நடித்து முடித்த கையேடு, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணைந்த த்ரிஷா, தல - ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லீ' படத்திலும் இவர் தான் ஜோடியாக நடித்துள்ளார்.
திரையுலகை பொறுத்தவரை நயன்தாராவை விட படு பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அதே போல் சமீபத்தில், நடிகை திரிஷா தளபதி விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது.
அரசியலில் இறங்கிட்டு தளபதி இப்படி செய்வது கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில்... இதுகுறித்து பல விமர்சனங்களும் வெளியானது.
தன்னை சுற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத த்ரிஷா சமூக வலைத்தளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'கை, கால், கிட்னி ஏதாவது போச்சா..?' ஒரே நாளில் சிதைத்து விட்ட முதல்வர்..! கொன்னுட்டீங்களே சார்... அல்லு அர்ஜூன் வேதனை