இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!
சிறந்த ஊக்கமளிக்கும் 10 படங்கள் பட்டியலில் அமரன் படம் இடம் பெற்று உள்ளது.
"இனி அச்சம் அச்சம் இல்லை" என்ற பாடல் கேட்டால் அனைவருக்கும் முன்பு நினைவுக்கு வருவது தேசப்பற்று பாடல் அல்லது நடிகர் சூர்யா நடித்த சிங்கம் பட பாடல் தான். ஆனால் இந்த பாடலை தற்பொழுது கேட்டால் அனைவரது நினைவிற்கும் வருவது மேஜர் முகுந்த் வரதராஜன். அந்த அளவிற்கு அனைவரது உள்ளத்திலும் ஆழமாக அவரை பதிய வைத்த படம் தான் அமரன்.
இதுவரை காமெடி கதாபாத்திரங்களை முன்னோடியாக வைத்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்திற்காக தனது 100 சதவீத உழைப்பை கொடுத்து நடித்திருப்பதை நம்மால் பார்த்திருக்க முடியும், தனது உடலை மெருகேற்றி ராணுவ வீரனாக அவதாரம் எடுத்து மேஜர் முகுந்த் வரதராஜனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். இவருக்கு இணையாக சாய் பல்லவியும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி தன்னை உண்மையான முகுந்தனின் மனைவி இந்துவையே பிரதிபலிக்க வைத்தார்.
இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!
இப்படிப்பட்ட அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரிபில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இந்த உலகிற்கு முக்கிய படைப்பாக கொடுத்தார். இப்படி இருக்க இந்த படத்தில், தனது குடும்பத்தின் மீது என்றும் அக்கறை உள்ள மேஜர் முகுந்த் தனது மனைவி பிள்ளைகள் மீது அதிக அன்பு வைத்திருந்தாலும், நாட்டின் மீது கொண்ட பற்றால் ராணுவத்தில் கடும் முயற்சிக்கு பின் சேர்ந்து, பல போராட்டங்களில் வெற்றி கண்டு இறுதியாக போர்க்களத்தில் தனது உயிரை விடுவார். இதனை அறிந்த இந்து கணவர் சொன்ன வார்த்தையை மனதில் வைத்து கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் அவரது உடலை நாட்டிற்க்காக அர்ப்பணித்து கொடுத்திருப்பார். இந்த காட்சிகள் தியேட்டரில் உள்ள அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இவ்வாறு மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் முற்றிலுமாக தழுவிய இந்த படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமல்லாமல் ஓ.டி.டியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்ப்பல்லவி நடித்த இந்த 'அமரன்' படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிடுவதர்காக அமரன் படம் தேர்வாகி, சிறந்த ஊக்கமளிக்கும் 10 படங்கள் பட்டியலில் அமரன் படத்தை இடம்பெறச் செய்து திரையிடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதை பார்த்த படக்குழுவினரும் ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி..! சாப்பிட்டவர்கள் கூறிய அந்த வார்த்தை..! இப்படி ஆயிடுச்சே..!