×
 

சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...!

தமிழ் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை கயாடு லோஹர் நாளை சேலத்திற்கு சிறப்பு விருந்தினராக செல்கிறார்.

மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை என்ற கன்னட படத்தில் முதன் முறையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். அதன் பின் தெலுங்கில் 'அல்லூரி' என்ற படத்தில் நடித்தார். இப்படி கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்து அப்பகுதியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இவர். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்து, தமிழ்திரையுலக கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் தற்பொழுது ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப்படைத்து உள்ளது. 

இதனை தொடர்ந்து, நடிகை கயாடு லோஹர்க்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாக தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், தமிழில் தனது அடுத்த படமான 'இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, ரக்ஷன், பிரக்யா, ஏஞ்சலின் மற்றும் யஷாஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: நான் தமிழ்ப்பொண்ணு இல்லை.. உங்கள் அன்பு விலைமதிக்காதது.. கண்ணீரோடு நன்றி சொன்ன 'டிராகன் ஹீரோயின்'..!

இந்த சூழலில், தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை கயாடு லோஹர், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும். இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன் என கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார்.

இப்படி தனது திறமைகளை வைத்து படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் நடிகை கயாடு லோஹர், தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது போலவே, மக்கள் கொடுத்த அன்பை திரும்பி கொடுக்கும் வகையில் "நாளை சேலத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது ரசிகர்களுக்கு அன்பை வெளிக்காட்ட இருக்கிறார்" என்ற அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் வருகைக்கு ஆடம்பரமாக வரவேற்பும் பாதுகாப்பும் கொடுத்து கவுரவமாக வரவேற்க இருப்பதாக கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது . 

இதையும் படிங்க: டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share