பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!
பிரபல நடிகரை வைத்து பிரபல இயக்குநர் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
"வாழ்க்கைனா பயம் இருக்கனும், அது நெஞ்சுக்குள்ள இருக்கனும், ஆனா அது மத்தவங்களுடையதா இருக்கணும்" இந்த டைலாக்கை கேட்டாலே உடனே நினைவுக்கு வருவது "கே.ஜி.எப்". நடிகர் யாஷ் நடிப்பில் உருவான இந்த படத்தின் விதை தான், இன்று புஷ்பா முதலான படங்கள். இந்த படம் என்று திரையுலகில் ஹிட் கொடுத்ததோ அன்றிலிருந்து அனைவரது படத்தின் பேட்டனும் கேங்க்ஸ்டர், மைனிங்க், கடத்தல் என உருவாக ஆரம்பித்து உள்ளது. எப்படி பாகுபலி இயக்குநர் 'ராஜமௌலி' என்று அனைவருக்கும் தெரியுமோ, அதே போல் கேஜிஎப் என்றால் 'பிரஷாந்த் நீல்' என்று தெரியும். படத்தின் ஹீரோக்களைவிட இவர்கள் பேமஸ். இந்த இரண்டு இயக்குநர்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் "பட பட்ஜெட் எப்படி தூக்கலாக இருக்கிறதோ அதே அளவுக்கு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸும் தூக்கலாகவே இருக்கும்".
இப்படிப்பட்ட பெருமைகளுக்கு சொந்தகாரரான இயக்குநர் 'பிரஷாந்த் நீல்' உக்ரம்(2014), கேஜிஎஃப்: 1(2018), கேஜிஎஃப்: 2(2022), சலார்(2023), பகீரா(2024) போன்ற வெற்றி படங்களுக்கு சொந்த காரர். இவர் இயக்கிய ஐந்து படங்களுக்கும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக 2015ல் உக்ரம் படத்திற்காக "62வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்"மற்றும் "4வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்"பெற்றுள்ளார். 2012ல் கேஜிஎப் முதல் பாகத்திற்கு மூன்று விருதுகளும், 2019ல் கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு இரண்டு விருதுகளும், 2024ல் சலார் முதல் பாகத்திற்கு இரண்டு விருதுகளையும் பெற்று சிறந்த இயக்குநராக இருக்கிறார்.
இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!
இதன் தொடர்ச்சியாக, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கேஜிஎப் மூன்றாம் பாகம், சலார் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து இருக்கிறார் இயக்குநர் 'பிரஷாந்த் நீல்'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜுனியர் என்டிஆர் நடிப்பில், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் தான் "NTR31". கடந்தாண்டு மே மாதம் என்டிஆரின் பிறந்த நாள் அன்று இப்படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் வெளியிட்டு இருந்தார். "NTR31" படத்திற்கான பூஜை கடந்த மாதத்தில் திடீரென போடப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள "பான் இந்தியா" படமான "NTR31" படத்தின் முதல் நாள் சூட்டிங்கின் கலவரக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜுனியர் என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகியோர் இப்படத்தின் முதல் நாள் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் ஆயிரக்கணக்கானோரை வைத்து கலவரக்காட்சிகள் இயக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில், புகைப்படத்தை பார்த்த பிரஷாந்த் நீல் ரசிகர்கள், கொஞ்சம் கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கு கருணை காண்பித்தால் நன்றாக இருக்கும் என தங்களது குமுறலை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்களுக்கு இந்தி தவிர வேற என்ன தெரியும்.. எங்கள கட்டாய படுத்த தெரியும்..! இப்ப பிராகாஷ் ராஜ் கிட்ட சிக்குனது யாரு..?