ரூ.700 கோடி பட்ஜெட்... பிரம்மாண்டத்தில் "பாகுபலி"யை மிஞ்சும் "மகாபாரதம்".. தமிழ் இயக்குநரின் குறி தப்பல..!
புதிய பரிமாணத்தில் ரூ.700 கோடி செலவில் தயாராக இருக்கிறது மகாபாரதம் திரைப்படம்.
முன்பு கோடிகளில் படம் எடுப்பவர் என்றால் இயங்குநர் சங்கர், ஆனால் இப்பொழுது கேட்டு பார்த்தால் அனைவரும் கூறுவது இயக்குநர் ராஜமௌலியை தான். காரணம் அவர் பெயரை நிலைநிறுத்திய "பாகுபலி". அட்டகாசமான திரைக்கதை வசனத்துடன் பிரமாண்ட படைப்பில் உருவாக்கி இருப்பார். அடுத்து இவர் உருவாக்கிய "RRR" படமும் மிகப்பெரிய பொருட் செலவில் உருவானது தான். ஆனால் அவரை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக இருந்தாலும் அதிக வசூல் இல்லாத படம். இப்படி இருக்க ராஜமௌலியை பின்னுக்கு தள்ள மீண்டும் களம் இறங்குகிறார் இயக்குநர் ஒருவர்.
மகாபாரதம் என்றால் அர்ஜுனன் தான் நினைவுக்கு வருவது அப்போது.. இப்போது மகாபாரதம் என்றால் பிரபல தொலைக்காட்சியில் வரும் சீரியல். அந்த அளவிற்கு மகாபாரத கதைகளை காண்பவர்கள் பலர் உண்டு. நவீன இந்து சமயத்தின் முக்கியமாக கருதப்படும் மகாபாரதம், இராமாயணம் இரண்டுமே இதிகாசங்களுள் ஒன்று எனலாம். குறிப்பாக வியாச முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. அதிலும், இடையில் நிறுத்தாமல் பாடல்களை தொடர்ச்சியாக சொல்லிவர வேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம் அதற்காகவே வியாசரும் எழுதும் முன் தன் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு எழுதினால் இந்த நிபந்தனைக்கு உடன்படுவதாக பிள்ளையாரிடம் கூறினாராம்.
இதையும் படிங்க: திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... புத்தம் புதிய திரைப்படங்கள் இப்போது ஓடிடியில்..!
இந்த நிலையில், தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் லிங்குசாமி. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியிடப்பட்ட அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியிலே முடிந்தது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த விங்குசாமி, தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பு ஒன்றையும் வெளியிடலாமல் மௌனம் சாதித்து வந்தார்.
இந்த நிலையில் லிங்குசாமி மகிழ்ச்சி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். பத்திரிக்கைகளில் பேட்டி அளித்த லிங்குசாமி "மகாபாரதத்தை மையமாக வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள், ரூ.700 கோடி பட்ஜெட் செலவில், எல்லா தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன், பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வரும் படத்தை தான் இயக்க இருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
எப்படி வேண்டுமானாலும் எடுங்க லிங்குசாமி ஆனா கீர்த்தி சுரேஷுக்கு வைத்த மாதிரி அர்ஜுனனுக்கு வீலிங் காட்சி மட்டும் வைத்து விடாதீர்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன சிம்பு சார் மனசுலாயோ... ஃபர்ஸ்ட் இவர் படத்துல தான் நடிக்கனும்.. ரசிகர்கள் போட்ட கண்டிஷன்..!