ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?
ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?
மயிலு ஸ்ரீதேவியை மறக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து கோடம்பாக்கத்தில் கோலோச்சி, ஹிந்தி சினிமாவில் ஆளுமை செலுத்தியவர். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், இன்றைய தலைமுறை ரசிகர்களும் அவரது படங்களை விரும்பின் பார்க்கிறார்கள்.
ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துள்ளார். அவர்களில் முக்கியமாவனர் ரஜினிகாந்த். ஸ்ரீதேவி - ரஜினிகாந்துடன் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்.
திரைப்படங்களையும் தாண்டி ரஜினிகாந்த்- ஸ்ரீதேவி இடையே உறவு துளித்து வந்தது. அது காதலோ, நட்போ அதை அவர்களே அறிவார்கள். ஸ்ரீதேவி, ரஜினிகாந்தின் தீவிர ரசிகை என்றும், ஒருமுறை ரஜினிக்காக 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதையும் ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி தனது சினிமா வாழ்க்கையை தமிழ் சினிமாவில் இருந்தே ஆரம்பித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது முதல் படத்திலேயே ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தவர். ஸ்ரீதேவி தனது 13 வயதில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் 16 வயதினிலே படத்தில் நடித்தார். ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி சுமார் 25 படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். பாலிவுட்டில் இருவரும் 'சால்பாஸ்', 'கெய்ர் லீகல்', 'ஃபரிஷ்டே', 'ஜுல்ம்' போன்ற படங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலை! சேலையில் சூடேற்றும் 23 வயசு இளம் சிட்டு; ஸ்ரீலீலா போட்டோஸ்!
தனக்காக ஸ்ரீதேவி உண்ணாவிரதம் இருந்தபோது அளித்த ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், இதனை வெளிப்படுத்தி உள்ளார். 2011-ம் ஆண்டு ராணா படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, ரஜினி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு ரஜினிகாந்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை அறிந்த ஸ்ரீதேவி, ஷீரடி செல்ல முடிவு செய்தார். ஸ்ரீதேவி ஷீரடிக்கு வந்து சாய்பாபாவிடம் வேண்டிக்கொண்டு 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், இதனால் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து திரும்பினார்.
ரஜினிகாந்த் குணமடைந்து சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியதும், ஸ்ரீதேவிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ரஜினியை பார்க்க தனது கணவர் போனி கபூருடன் ஓடோடி வந்தார் ஸ்ரீதேவி. அதன் பிறகு மீண்டும் ஷீரடிக்கு சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
முன்பு ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் தனது பேட்டியின் போது, ‘‘ஸ்ரீதேவியின் மீது ரஜினிக்கு மிகவும் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், ஒருமுறை ஸ்ரீதேவியின் வீட்டிற்கே சென்று அவரிடம் காதலை தெரிவிக்க முடிவு செய்து இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.