×
 

மணமகள் கம்மல்... ஆட்டோவில் என்ட்ரி; கவர்ச்சி உடையில் கீர்த்தி கொண்டாடிய மருதாணி கொண்டாட்டம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது, திருமணத்திற்கு முன்பு கோவா ரிசார்ட்டில் நடந்த மருதாணி நிகழ்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி வெற்றி கண்ட வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
 

இவர் நடிப்பில் வெளியான, இது என்ன மாயம், தொடரி, பைரவா போன்ற படங்கள் அடுத்தது தோல்வியடைந்தது.

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்களின் வெற்றி அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று தந்தது.

இதையும் படிங்க: கண்ணே பட்டுடும்.. கணவர் ஆண்டனி தட்டிலுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய தல பொங்கல் போட்டோஸ்!

முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார் கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில், அறிமுகமான சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

டாப் நடிகர்களின் படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில், இவர் கதையின் நாயகியாக நடித்த மகாநடி திரைப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக இந்த படம் எடுக்க பட்டிருந்தது.

இந்த படம் கீர்த்திக்கு தேசிய விருது நாயகி என்கிற அந்தஸ்தையும் பெற்று தந்தது.

இந்நிலையில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்தது.

அப்போது மருதாணி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காதில் மணமகள் என வித்தியாசமான கம்மல் போட்டு, இலையில் அரைத்த மருதாணி அனைவருக்கும் கைகளில் வைக்கப்பட்டது.

குறிப்பாக கவர்ச்சி உடை...  ஆட்டோ என்ட்ரி என அதகளம் செய்துள்ளார். 

ஆட்டம் பட்டத்துக்கு குறைவில்லாமல் இந்த மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share