×
 

என்ன "ஜெயிலர்" சவுண்ட் "ஜப்பான்" வரைக்கும் இருக்கு..! ஜப்பானில் தடம் பதித்த ஜெயிலர்.....ரிலீஸ் எப்போ..?

நாடு கடந்து சென்று திரையிட தயாராக இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படம்.

ஜப்பான் மக்கள் நாகரிகம் மற்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றவர்கள், அப்படி பட்டவர்களே தமிழை கற்றுக்கொள்ள விரும்பி அங்கு தமிழ் பாடங்களை எல்லாம் மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நம் படம் அங்கு திரையிடப்பட போகிறது என்றால் அது மகிழ்ச்சியான செய்தி தானே. 

இந்த நிலையில், ரஜினியின் மிக சிறந்த படம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு இரண்டாவது பாகத்திற்காக ஆவலாக இருக்கும் படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார்  ரஜினியின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இதில் அனிரூத் அவர்களின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக "அலப்பறை கிளப்புவோம், காவாலையா" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது. 

இதையும் படிங்க: ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்! 

இதை தொடர்ந்து, படம் ரிலீஸ் ஆகி, ரூ600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதனால் படத்தின்  இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும் , படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும்  "போர்ஷே கேயென்" ரக (Porsche cayenne) காரையும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு BMW X7 காரையும் பரிசாக அளித்தார்.சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன். 

இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதியான நாளை ஜப்பானில் வெளியாகிறது என்ற செய்தியை படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே "நான் ஈ" போன்ற படங்களை வெளிநாடுகளில் திரையிடப்பட்டு அதன் காட்சிகளை பகிர்ந்த நிலையில் தற்பொழுது ஜெயிலர் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.


 

இதையும் படிங்க: மறைந்தார் பழம் பெரும் நடிகை புஷ்பலதா... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share