×
 

ஹீரோயினுடன் சேர்ந்து பீடி பிடிக்கும் சசிகுமார்.. வெளியானது மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சசிகுமார், ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க உள்ள, 'மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி-  ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய  சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ' மை லார்ட் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகனான சசிகுமார், கதாநாயகியுடன் அமர்ந்து பீடி பிடிப்பது போல் உள்ளது. மேலும் சசிகுமாரின் தோற்றம்  தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

இதையும் படிங்க: ஸ்டன்னிங் உடையில்... இடையழகை காட்டி மயக்கும் மடோனா செபஸ்டியன்!

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் -  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும், முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமுடி - ராஜ் பி. ஷெட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்டுள்ளனர்.
 

இதையும் படிங்க: Andrea Jeremiah: தாய்லாந்தை கவர்ச்சியால் தெறிக்கவிடம் ஆண்ட்ரியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share