×
 

மதுரையை நோக்கி நடக்கும் சேஸிங்.. குழந்தையின் உயிரை காப்பாற்றுவார்களா? பரணி - ஷண்முகம்! அண்ணா சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு மதுரைக்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணி தன்னுடைய பிரபஸருக்கு போன் செய்து இது ஒரு அறிய வகை டிசீஸ்.. இதற்கான மருந்து மதுரையில் தான் கிடைக்கும் என்று சொல்லி வேகவேகமாக செல்கிறாள். 

இன்னொரு பக்கம் ஷண்முகம் பரணி சொன்ன மருந்தை வாங்க மெடிக்கல் ஷாப்களில் ஏறி இறங்குகிறான். இங்கே குழந்தையை காணாததால் பதறும் பெற்றோர் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு விஷயத்தை சொல்கின்றனர். 

இதையும் படிங்க: Anna Serial: சௌந்தரபாண்டியை கடுப்பாக்கிய சிவபாலன்; நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

சௌந்தரபாண்டி என் பையன் தான் இன்ஸ்பெக்டர் நான் தேட சொல்கிறேன் என சொல்கிறார். மேலும் வந்தவர் ஆக்டிங் ட்ரைவர் என சொல்லி கார் நம்பர், டிரைவரின் போட்டோ உள்ளிட்ட விஷயங்களையும் சேர் செய்கின்றனர். 

இங்கே ஷண்முகம் கடை கடையாக ஏறி இறங்கியும் மருந்து கிடைக்காத நிலையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் முருகன் சிரித்து கொண்டிருப்பது போல் இருக்கும் போட்டோவை பார்த்து நம்பிக்கையுடன் விசாரிக்க மருந்தும் கிடைக்கிறது. 

ஷண்முகம் மருந்து கிடைத்து விட்டதாக பரணிக்கு தகவல் கொடுக்க இருவரும் லொகேஷனை ஷேர் செய்து நெருங்கி செல்கின்றனர். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி நம்பரை வைத்து ட்ரேஸ் செய்து கார் மதுரை நோக்கி செல்வதை அறிந்து கொண்டு அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கிறான். 

ஷண்முகம் மற்றும் பரணி என இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் வர இடையில் இருக்கும் பாலம் உடைந்து விட்டதாகவும் கார் போக முடியாது எனவும் சொல்கிறான். பாலத்திற்கு ஒரு பக்கம் பரணி இன்னொரு பக்கம் ஷண்முகம் என நிற்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share