கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் புகழை தேடி தந்தது, இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள "டிராகன்" திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து, நாளை வெளியாக உள்ள இப்படத்தின் பிரமோஷன் தனியார் யூ டியூப் சேனலில் நடைபெற்றது. அதில் விஜே சித்து, ஹர்ஷத்கான் உடன் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஷ்வின் மாரிமுத்தும் கலந்து கொண்டனர். அதில் இந்த படம், டான் 2 தானே என கலாய்த்து தள்ளி உள்ளனர், மேலும் நண்பன், டான், இனிது இனிது போன்ற படங்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாமே என பேசி காமெடியாக இப்ரமோஷன் செய்தனர்.
இதையும் படிங்க: ஒழுங்கா போய் படிங்கடா... இன்ஜினியர் ஆகுறதுலாம் கஷ்டம் டா..! பிரதீப் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட இன்ஸ்டா பெண் ..!

இதிலும், இன்ஸ்டாவில் ஒரு பெண், இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த அனைவரும், வாழ்க்கையில என்ன பண்ணுவது என்று தெரியாமல், எப்படி உருப்புடுவது என்பது தெரியாமல் இருந்தீங்கன்னா..பிரதீப் அண்ணா உங்களுக்கு ப்ளோ ஜாப் கொடுத்துட்டு போவாரு.. இந்த படத்துல வருவதை பார்த்து 42 அரியர் வைத்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தீர்கள் ஆனால் கண்டிப்பாக பிச்சைதான் எடுக்கனும். அதுக்கும் மேல மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம் படிச்சவங்களே வேலைதேடி கஷ்ட்டப்பட்டு இருக்கின்றனர், இது தெரியாமல் இப்படி பட்ட படத்தை எடுத்து, சமூகத்தை சீர்கொலைக்கும் படம் என்றால் இந்த படம் தான் என ஆவேசமாக பேசி இருக்கிறார்.
இவ்வளவு விமர்சனங்களுக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ள படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தின் இப்படம் "பிளாக் பஸ்டர்" ஹிட் படமாக அமையும் என பகிர்ந்து உள்ளது படத்திற்கான ஹைப்பை மேலும் எகுற வைத்துள்ளது.
இதையும் படிங்க: எடுத்த படம் எல்லாம் ஹிட்டு.. தோல்வியா என்னக்கா நெவர்.. யார் அந்த இயக்குநர்..?